பிந்திய செய்திகள்

ஒட்டாவாவில் போதைப்பொருள் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டது

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் இருந்த இறுதி இரண்டு மருத்துவக் கண்காணிப்புடனான போதைப்பொருள் நுகர்வு மையங்கள் நிரந்தரமாக மூடப்படவுள்ளது. இதனால் சமூக நல அமைப்புகள் மற்றும் போதைப்பொருள் நுகர்வோர் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. மாகாண அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு ஜூன் 13ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதை அடுத்து, இந்த மையங்கள் மூடப்படவுள்ளன.

ஒட்டாவாவில் இயங்கி வந்த ‘சான்டி ஹில் சமூக சுகாதார மையம்’ மற்றும் ‘ஒட்டாவா இன்னர் சிட்டி ஹெல்த்’ ஆகிய இரு மையங்களும் தங்களது சேவைகளை முழுமையாக நிறுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களின் சேவைகளைத் தினமும் நம்பியிருக்கும் நூற்றுக்கணக்கானவர்களில் ஒருவரான பெர்ரி ஃபைஃப் என்பவர், இந்த மூடல் முடிவு குறித்துக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மையங்கள் மூடப்படுவதால் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் தங்களது பழக்கத்தை நிறுத்தப் போவதில்லை என்றும், அது பொதுமக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறப்போகிறது என்றும் பயனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மையங்கள் இல்லாத பட்சத்தில், போதைப்பொருள் நுகர்வோர் அனைவரும் பூங்காக்கள், வீதிகள் எனப் பொதுமக்களின் நடமாட்டம் உள்ள திறந்தவெளிகளிலேயே போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவர்.

போதைப்பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் உபகரணங்கள் பொதுவெளியில் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடக்கும் அபாயம் உள்ளதால், அது ஒட்டுமொத்த நகரத்தின் சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களின் மூடல் காரணமாக, நகரில் போதைப்பொருள் அதிகரிப்பால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கவல

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts