பிந்திய செய்திகள்

புகையிலை பயன்பாடு: ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பேர் ஆண்டுதோறும் புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தெரிவிக்கப்பட்ட உண்மை இதுதான். புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்ததால், 16 லட்சம் பேர் புகையினால் உயிரிழந்துள்ளனர். புதிதாக புகைப்பிடிப்பவர்களில் பெரும்பாலானோர், தங்களுடைய தந்தை புகைப்பிடிப்பதை பார்த்து தான் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அரசும் புகைப்பிடிப்புக் குறித்த ஆன்லைன் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நீண்ட காலமாக புகைப்பிடிப்பவர்களில் 50 சதவீதம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் தான் உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய நோய், பக்கவாதம், காச நோய் மற்றும் பல்வேறு சுவாச நோய்களுக்கு புகைப்பிடித்தல் நேரடி காரணமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தமிழக இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காக முழுமையான திட்டங்களை தீட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts