பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், புதிய ப்ரீமியம் சந்தா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மெட்டா (Meta) நிறுவனத்தால் பெற்றுக்கொள்ள விரும்பும் பயனர்களுக்கான மாதத்திற்கு ரூபா 299 கட்டணமாக வழங்கப்படும்.
இன்ஸ்டாகிராம் செயலியானது தற்போது மிக அதிகமானோரால் பயன்படுத்தப்படும் தளமாக விளங்குவதால், இந்த புதிய கட்டணச் சேவை முற்றிலும் பயனர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது, “இந்த புதிய திட்டத்தினால் சாதாரண பயனர்களுக்கு எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும், அவர்கள் எப்போதும் போல இன்ஸ்டாகிராமை முற்றிலும் இலவசமாகவே தொடர்ந்து பயன்படுத்தலாம்.”
இந்த ‘இன்ஸ்டாகிராம் பிளஸ்’ சந்தா திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு பொதுவான பதிப்புகளுக்கு அப்பாற்பட்ட கூடுதல் அம்சங்கள், பிரத்யேகத் தனி விருப்பங்கள் உள்ளிட்ட பல விசேட சேவைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.











































