பிந்திய செய்திகள்

பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு: 7 பேர் கொடூரக்கொலை!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் குறைந்தது 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்றையதினம் நடந்தது. பயணிகள் சென்ற ஒரு தனியார் பிக்-அப் ரக வாகனத்தைக் குறிவைத்து, தொலைஇயக்கி மூலம் இயக்கப்படும் ஐஇடி வெடிகுண்டு கொண்டு முதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை! கொலை இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சைக்காக மற்றொரு காரில் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றபோது, மீட்புப் பணியாளர்களைக் குறிவைத்து இரண்டாவது குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டைத் தாக்குதலில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு ஆயுதமேந்திய அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பாகிஸ்தான் தலிபான் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்கள் இப்பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷேபாஸ் ஷெரீப், இதற்கு காரணமானவர்கள் மீட்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts