மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில் மாலை 4 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அதன் போது, அணையாவிளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அணையா விளக்கு திடல் பகுதியில் நடைபெற்ற மக்கள் எழுச்சி நிகழ்வின் போது, செம்மணி மனித புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணிகளில் இதுவரையில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மீட்கப்பட்ட 15 என்பு கூடுகளும் சேர்த்து நினைவுறுத்தப்பட்டது.
அகழ்வு பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எச்சங்களை நினைவுறுத்தி, அணையா விளக்கு திடலில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வு மக்கள் செயல் இயக்கத்தின் முயற்சியின் மூலம் நடைபெற்றது.
