Home Blog Page 10

ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது

கல்வி அமைச்சு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தற்போது இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன் கல்வித் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் விவாதித்து, 2023ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு அதிகபட்ச பாடசாலை நாட்களை வழங்குவதற்கும் 2022 பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

இனி வீட்டிலேயே செய்திடலாம் பீட்சா

தேவையான பொருட்கள்:

மைதா – 4 கப்
ஈஸ்ட் – 5 கிராம்
சீனி – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

ஸ்டப்பிங் செய்ய:

பீட்ஸா சாஸ் – தேவையான அளவு
தக்காளி – ஒன்று
பெரிய வெங்காயம் – 1
கேரட் – ஒன்று
குடை மிளகாய் – பாதி
பச்சை மிளகாய் – ஒன்று
துருவிய சீஸ் – தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கி பின்னர் பின் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.

10 நிமிடம் கழித்து, 3 கப் மைதாவில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்த கலவையை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பரோட்டாவுக்கு பிசையும் மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.

பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணியால் மூடி ஒரு மணி நேரம் வைத்து பார்த்தால் அது இருமடங்காக அதிகரித்து இருக்கும். மாவினை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்து, மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து, அவன் ட்ரேயில் மாவை போட்டு சமமாக கையிலேயே விரித்து விடவும். ஓரங்களில் விரலால் ஒரே மாதிரியாக அழுத்தி விடவும். பீட்ஸா பேஸ் ரெடி. பின் பீட்ஸா மீது சாஸ் தேவையான அளவு தடவி பின்னர் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும்.

துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும். பின் சிறிது எண்ணெய்யை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும். பின்னர் பீட்ஸாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும் இதனால் வேகும் போது கிறிஸ்பியாக இருக்கும்.

பின் ட்ரேவை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் ஸிம்மில் வைத்து சூடாக்கவும். ஃப்ளேம் கொண்ட அடுப்பு எனில் ஃபுல் ஃப்ளேமில் தோசை கல்லை வைத்து அதன் மேல் ட்ரேவை வைக்கவும். ட்ரே நன்கு சூடானதும் எடுத்து விடவும். பீட்ஸாவின் ஓரங்கள் பொன்னிறத்தில் மாறி, சீஸ் காய்கறிகளுடன் நன்கு கலந்திருக்கும் போது வெளியே எடுக்கவும்.

முழங்கையில் உள்ள கருமை நீங்க சில டிப்ஸ் !!

டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரைவில் வெள்ளையாகும்.

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யலாம்.

தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்து வர, முழங்கை கருமை காணாமல் போகும்.

எலுமிச்சை சாற்றை நேரடியாக முழங்கை பகுதியில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் என 1-2 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். முழங்கையில் இருக்கும் கருமை போய்விடும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள்.

டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

தினமும் பாலை பஞ்சுருண்டை பயன்படுத்தி முழங்கையில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை வெள்ளையாகும்.

நாடளாவிய ரீதியில் மீண்டும் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் மீண்டும் இன்று முதல் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் (03) பகல் வேளையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜூன் 4 ஆம் திகதி இரவு வேளையில் மட்டும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜூன் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை இல்லாத வகையில் 13 பெண் அமைச்சா்கள் பதவி பிரமாணம்

இதுவரை இல்லாத வகையில் 13 பெண் அவுஸ்திரேலியாவில் அமைச்சா்களை உள்ளடக்கிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்றது.

அந்த நாட்டில் கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சியான லேபா் கட்சித் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி நாட்டின் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்த நிலையில், 11 நாள்களுக்குப் பிறகு அவரது தலைமையிலான அமைச்சரவை தலைநகா் கான்பெராவில் புதன்கிழமை நடைபெற்றது. கவா்னா் – ஜெனரல் டேவிட் ஹா்லே அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இந்த அமைச்சரவையில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 13 பெண்கள் இடம் பெற்றுள்ளனா். மேலும், முதல் பெண் முஸ்லிம் அமைச்சா், முதல் பூா்வக்குடி பெண் அமைச்சா் இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனா்.

மனவேதனை வரும் போது பெண்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யக்கூடாது!

கஷ்டங்கள் சோதனைகளை அந்த ஆண்டவன் இந்த பூமியில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றான். அந்த பாரத்தை நம்மால் எவ்வளவு சுமக்க முடியும் என்பது அவனுக்கு நன்றாக தெரியும். ஆகவே வரக்கூடிய கஷ்டத்தை கண்டு பயப்படாதீர்கள். உங்களால் அந்த கஷ்டத்தில் இருந்து வெளிவர முடியும் என்ற நம்பிக்கையோடு கஷ்டத்தை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுடைய வாழ்க்கைக்கு நல்லது. மன வேதனை துன்பம் துயரம் வரும் போது வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் எந்தெந்த தவறை செய்யக்கூடாது. அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட என்னென்ன வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளலாம்.

முதலில் உங்களுக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் உங்களை விட்டு ஒரு கர்மா குறைந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து யாரால் கஷ்டம் வந்தது. இந்த கஷ்டம் வர காரணமாக இருந்த அந்த குறிப்பிட்ட நபரை திட்டி அவருக்கு சாபம் கொடுத்து, அவரை பழிவாங்க சென்று புதியதாக ஒரு கர்மாவை நீங்கள் தேடிக் கொள்ளாதீர்கள். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழியைத்தான் காண வேண்டுமே தவிர பிரச்சனை எதனால் வந்தது யாரால் வந்தது என்று அலசி ஆராய்ந்து குழப்பிக் கொண்டு இருக்கக் கூடாது. இது முதல் விஷயம்.

இரண்டாவதாக வீட்டில் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் வீட்டில் இருக்கும் பெண்கள் தலையில் அடித்துக்கொண்டு, வயிற்றில் அடித்துக்கொண்டு, ஐயோ! என்று சொல்லி அழுது புலம்பும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். ஒரு வீட்டில் அப்படி செய்யவே கூடாது. நடந்த தவறை மீண்டும் மீண்டும் புலம்பி அழும் போது, அந்த கஷ்டத்தை திரும்பத் திரும்ப நம்முடைய உறவினர்களிடம் சொல்லி பகிரும் போது, அந்த கஷ்டம் நமக்கு இரட்டிப்பு சுமையை கொடுத்துவிடும். கஷ்டம் வந்திருச்சா அதை அப்படியே விட்டு விட்ருங்க. தானா வந்த கஷ்டம் தானா சரியாயிடும்.

இதே போல தான் நிறைய பேர் வீடுகளில் ஏதாவது பெரிய பிரச்சினை வந்துவிட்டால், இறந்த முன்னோர்களை திட்டுவார்கள். இறந்த முன்னோர்களை திட்டவோ, அவர்களை பழிக்கவோ கூடாது. இறந்த முன்னோர்கள் நம்முடைய கடவுள். அவர்களை நினைத்து இந்த பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது.

பிரச்சனை வந்துவிட்டதா அதை முதலில் இறைவனின் பாதங்களில் இறக்கி வைத்து விடுங்கள். இந்த பிரச்சனையிலிருந்து எப்படியாவது என்னை வெளியே கொண்டு வருவதற்கு தைரியத்தை கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டினருகில் எந்த கோவில் இருந்தாலும் அந்த கோவிலுக்கு சென்று உங்களுடைய மனதை சாந்தப் படுத்தி கொள்ளுங்கள்.

குறிப்பாக வீட்டின் அருகில் ஏதாவது சித்தர்கள் சமாதி அடைந்த கோவில்கள் உள்ளதா என்று பாருங்கள். அந்த இடத்திற்குப் போய் அமர்ந்து உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார தியானம் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுடைய குழப்பங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் ஒரு தெளிவு பிறக்கும்.

மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பார்த்தால் உங்களுக்கே புரியும். நம்பிக்கையோடு செய்யக்கூடிய வழிபாடு நமக்கு சீக்கிரம் நல்ல பலனைக் கொடுக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (02-06-2022)

மேஷம் :

அசுவினி: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாக வாய்ப்புண்டு
பரணி: துணிச்சலுடன் செயல்பட்டு சில பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். வரவுகள் மகிழ்ச்சிதரும்.
கார்த்திகை 1: புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. உங்கள் ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4: உடலில் பாதிப்பு தோன்றும். உணர்ச்சி வசப்பட வேண்டாம். பேச்சில் கவனம் தேவை.
ரோகிணி: உங்களைக் கோபப்படுத்தும் வகையில் சிலர் செயல்படலாம். அமைதி காப்பது நன்மை தரும்.
மிருகசீரிடம் 1, 2: அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். நிதானமாகச் செயல்படுங்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மனக்குழப்பத்திற்கு இடமளிக்க வேண்டாம். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உண்டு.
திருவாதிரை: எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: விரும்பியதை அடையும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். குழப்பங்கள் விலகும்.

கடகம் :

புனர்பூசம் 1, 2, 3:புதிய முயற்சிகளில் கவனம் செல்லும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.
பூசம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆடம்பர செலவால் பணம் கரையும். யோசித்து செயல்படவும்.
ஆயில்யம்: தந்தைவழியில் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் :

மகம்: வராமல் இருந்த பணம் வசூலாகும். புதிதாக சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
பூரம்: எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். நண்பர்களால் உங்கள் தேவைகளை அடைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
உத்திரம்1: விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்களுடைய வாக்கிற்கு மதிப்பு கிடைக்கும்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவருக்கு நல்ல தகவல் வரும். தொழில் முயற்சி வெற்றி பெறும்.
அஸ்தம்: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கடைபிடிப்பீர்கள். வருமானம் கூடும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பர்.
சித்திரை 1, 2: திறமை வெளிப்படும் அதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.

துலாம் :

சித்திரை 3, 4:எதிர்பார்த்த நன்மை கிடைக்காமல் போகும். பணத்தால் உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
சுவாதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். நண்பர்களுக்கு உதவி செய்ய சங்கடத்திற்கு ஆளாவீர்கள். எச்சரிக்கை தேவை.
விசாகம்1, 2, 3: குழப்பம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவருடன் பழக வேண்டாம். யாருக்கும் ஜாமின் போட வேண்டாம்.

விருச்சிகம் :

விசாகம் 4: சங்கடப்படுத்தும் வகையில் சில விஷயம் நடக்கும். புதிய முயற்சி எதிலும் ஈடுபாட வேண்டாம்.
அனுஷம்: உறவினர்களிடம் மோதல் உண்டாகும். வீண் விவகாரங்களில் தலையிடுவதால் பிரச்னை உருவாகும்.
கேட்டை: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது.

தனுசு :

மூலம்: நட்புகளின் வழியே நன்மை காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணவரவு உண்டு.
பூராடம்: குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை மீது அக்கறை கொள்வீர்கள்.
உத்திராடம் 1:நீண்ட நாட்களுக்குப்பின் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்ததை இன்று அடைவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: உடலில் இருந்த சங்கடம் விலகி உற்சாகமுடன் செயல்படுவீர்கள். செல்வாக்கு கூடும்.
திருவோணம்: எதிரிகளுக்கு பாடம் புகட்டுவீர்கள். நினைத்ததை அடைவீர்கள். செல்வாக்கு மேம்படும்.
அவிட்டம் 1, 2: முயற்சியில் வெற்றி உண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: வரவை விட செலவு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.
சதயம்: பிள்ளைகளின் வழியே சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போகும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்தவற்றில் நன்மை கிடைக்காது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: வரவை விட செலவு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.
சதயம்: பிள்ளைகளின் வழியே சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போகும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்தவற்றில் நன்மை கிடைக்காது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரணில் விக்ரமசிங்கவிவின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி

வற் வரியை 12 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் அல்லாத பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான இறக்குமதி அல்லது மிகை வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவிவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

கடந்த 2019 நவம்பர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டம் தொடர்பான வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டு இன்று முதல் புதிய வரைமுறை அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கப்போகும் சிகரெட்டின் விலை

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி சிகரெட்டின் வகைக்கேற்ப விலை உயர்வு நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிகரெட் வகைக்கேற்ப விலை அதிகரிப்பு குறித்து இன்று இரவு அறிவிக்கப்படும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் தறிகெட்டு ஓடிய காரால் 12 வாகனங்களுக்கு சேதம்

கொழும்பு வஜிரா வீதியில் விசாகா வித்தியாலயத்துக்கு அருகில் நேற்று மாலை அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.

கார் தறிகெட்டு ஓடியதால் 9 கார்கள் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் உட்பட 12 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந் துள்ளன. அத்துடன் இந்த விபத்தில் கெப் வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாதாரணதரப் பரீட்சை நடைபெற்ற நிலையில் பாடசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களே இவ்வாறு சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் விபத்து இடம்பெற்ற போது சாரதி குடிபோதையில் இருந்ததாக பரவும் வதந்திகளையும் பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

விபத்தின் போது காருக்குள் சாரதி உட்பட இருவர் இருந்த நிலையில் சம்பவத்தை அடுத்து சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.