Home Blog Page 11

“தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு”

கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள்.யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்த தினம் நேற்று ஆகும் .1981ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி நள்ளிரவுக்குப் பின்னர் இச்சம்பவம் நடைபெற்றது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளின் ஒட்டுமொத்த உதாரணமாகவே யாழ் நுலகம் தீக்கிரை யாக்கப்பட்ட சம்பவத்தை உலக நாடுகள் அந்நாளில் நோக்கின.

இலங்கையின் இனப் பிரச்சினையானது மற்றொரு பரிமாணத்துக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு யாழ். நூலக எரிப்பு சம்பவமும் காரணமாக அமைந்திருந்தது எனலாம்.

தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன்மையான பொது நூலகமாக யாழ் நூலகம் விளங்கியது. அங்கு வைக்கப்பட்டிருந்த பல நூல்கள் உலகின் வேறெந்த நூலகத்திலும் காணக் கிடைக்காதவை ஆகும்.

இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாறு என்றெல்லாம் பல்வேறு துறை சார்ந்த மிகச் சிறந்த நூல்கள் அங்கே இருந்தன. யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள கல்விமான்கள். அறிவுஜீவிகள், புத்திசாலிகள், பேரறிஞர்கள், நலன் விரும்பிகள் போன்றோரால் அன்பளிப்பு செய்யப்பட்ட சிறந்த நூல்கள் அங்கு இருந்தன.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழைமையான ஓலைச்சுவடிகள் 1800 களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் அழிந்த புத்தகங்கள்

இவற்றில் கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல், 1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல் ஆகியவை அழிந்தன.

1585 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல், சேர் பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய பகவத்கீதை விளக்கம், சித்தாந்தம், செந்தமிழ் இலக்கிய நூல்கள், திருமதி இராமநாதன் அம்மையார் எழுதிய இராமாயாண மொழிபெயர்ப்பு, மகாகவி பாரதியாரின் நண்பரான நெல்லையப்பன் எழுதிய நூல்கள், கடலைக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய சோதிட சாஸ்திர நூல்கள், வானசாஸ்த்திரம் சம்பந்தமான நூல்கள், சித்தவைத்திய வாசகங்கள் அடங்கலான ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அழிந்தன.

மேலும், முத்துத்தம்பிபிள்ளை ஏழுதிய அபிதானகோசம், சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, முதலியார் இராசநாயகம் எழுதிய புராதன யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசம், முத்துத்தம்பிபிள்ளை எழுதிய யாழ்ப்பாணம் பற்றிய நூல்கள், கல்லடி வேலன் என்று அழைக்கப்பெற்ற கே.வேலுப்பிள்ளை இயற்றிய யாழ்ப்பாண வைபவகௌமுகி, சிற்பக்கலை பற்றிய நூல்கள், தனிநாயக அடிகளார் பதிப்பித்து வெளியிடப்பட்ட”தமிழ் கலாசாரம்” எனும் ஆங்கில சஞ்சிகை, இராசையனார், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, ஆனந்தகுமாரசாமி மற்றும் முதலியார் குலசபாநாதன் சேகரித்த நூல்கள், மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அழிவடைந்தன.

நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழ் மக்களை மட்டுமன்றி, உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்த நிகழ்வு.

Public Library, Jaffna

நூலகம் எரிக்கப்பட்ட விதம், இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாத ரணத்தை ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

யாழ். நூலகம் 1933ம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது குறிப்பிடத் தக்கது.

தமிழர்களின் பொக்கிஷம் எரியூட்டப்பட்டு 41 ஆண்டுகள்-அனுஷ்டிக்கப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு

இன்றைய 01.06.2022 தினம் யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டதன் 41 ஆவது வருட நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ். பொதுசன நூலகம் 1981 ஆம் ஆண்டு எரியூட்டப்பட்டு சிதைவடைந்த நிலையில், அது மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் நூலகம் எரியூட்டப்பட்ட தன் 41ஆவது நினைவு தினம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.

தமிழர்களின் வரலாற்று சொத்தாக இருந்த யாழ் நூலகம் சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டு தமிழர்களின் வரலாற்று சொத்துக்கள் அன்று அழிக்கப்பட்டன

யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர முதல்வர், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர், யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் நூலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், நூலகம் எரியூட்டப்பட்ட சம்பவம் கேள்விப்பட்டவுடன் மாரடைப்பால் உயிரிழந்த அருட்தந்தை மற்றும் நூலக நிறுவுனரின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன

இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

இலங்கைக்குள் இறக்குமதி செய்ய மட்டுப்படுத்தப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற 369 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த 369 அத்தியாவசிய பொருட்களை செல்லுப்படியாகும் உரிமம் இன்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் வரிகள் உட்பட பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ரி20 இலங்கை அணி அறிவிப்பு

எதிர்வரும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் இலங்கை ரி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணித்தலைவராக தசுன் ஷானக நியமிக்கபட்டுள்ளதுடன் ஏனையவர்களின் பெயர்கள் பின்வருமாறு,

தசுன் ஷானக (தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
தனுஷ்க குணதிலக்க
குசல் மென்டிஸ்
சரித் அசலங்க
பானுக ராஜபக்ச
நுவனிந்து பெர்னாண்டோ
லஹிரு மதுஷங்க
வனிந்து ஹசரங்க
சாமிக்க கருணாரத்ன
துஷ்மந்த சமீர
கசுன் ராஜித
நுவன் துஷார
மதீஷ பத்திரன
ரமேஷ் மென்டிஸ்
பிரவீன் ஜெயவிக்ரம
லக்ஷன் சந்தகன்
மகேஷ் தீக்ஷனா

திருப்பூர் மாவட்டத்தில் 14-ம் நூற்றாண்டு சத்திரம் கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆலம்பாளையம் பாலசுப்பிரமணியன் தோட்டத்தில் பழமையான சத்திரத்தில் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இப்பழமையான சத்திரம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மதுரை பாண்டியநாடு ஆய்வு மையத்திற்கு தெரிவித்தார். மையத்தின் ஒட்டன்சத்திரம் அலுவலகத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் அரில்டாட்டில், லட்சுமண மூர்த்தி ஆகியோர் சத்திரத்திலிருந்த 14ம் நூற்றாண்டு கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர்.

இந்த பழமையான சத்திரம் வழிப்போக்கர்கள் தங்க அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இவை தொடர்பற்று காணப்படுகின்றன.

சத்திரம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டபோது கல்வெட்டுகள் இடம் மாறி இருக்க வாய்ப்புள்ளது. இதன் மறு கட்டமைப்பு காலம் 16 ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

கல்வெட்டில் குறுநில மன்னன் கலிய அதியமான் பெயர் இடம் பெற்றுள்ளது. ராஜராஜேஸ்வரி என்ற நபர் கலிய அதியமானின் கீழ்கட்டுப்பட்டவர். இந்த சத்திரத்தை பாதுகாத்தார். பொறுப்பாளராக இருந்தார் என கல்வெட்டுகள் கூறுகின்றன.

இச்சத்திரத்தில் வழிப்போக்கர்களுக்குமூன்று நேரமும் உணவு வழங்கப்பட்டிருக்கிறது. வழிப்போக்கர்கள் மட்டுமல்லாது உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதையும் நோக்கமாக கொண்டு இச்சத்திரம் செயல்பட்டது கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது என்றனர்.

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது இரண்டு சூப்பர் அம்சங்கள்

வாட்ஸ்அப் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. அத்தகைய வாட்ஸ்அப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் புது அம்சம் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப்பில் நாம் பதிவிடும் ஸ்டேட்டஸ்-க்கு பதில் வரும் போது அதனை பொதுவான மெசேஜ் போல் இன்றி தனியாக பிரித்துக் காட்டும் அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருப்பதாகவும், பீட்டா சோதனையாளர்களுக்குக் கூட இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இது எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு, ஐ.ஒ.எஸ். மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டேட்டஸ் ரிப்ளை இன்டிகேட்டர் தவிர, டெஸ்க்டாப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, கவர் புகைப்படத்தை அமைக்கும் வசதியினை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளதாம்.

கேஜிஎப்-2 பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் ‘கேஜிஎப்-2’. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

மேலும், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய நிலையில், அமேசான் பிரைமில் ‘கேஜிஎப் 2’ படத்தை காண ரூ.199 தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது ஜூன் 3-ஆம் தேதி அமேசான் பிரைமில் ஐந்து மொழிகளில் ‘கேஜிஎப் 2’ வெளியாகவுள்ளது. இப்படத்தினை அமேசான் சந்தாதாரர்கள் இலவசமாக காணலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கேஜிஎப் 2’ படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டு ரசிகர்களை கவந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளதுஇதன்படி, டொலரின் பெறுமதியில் சிறிதளவான மாற்றம் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 365 ரூபா 09 சதமாக பதிவாகியுள்ளது.அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 355 ரூபா 12 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோவின் பெறுமதி

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 392 ரூபா 25 சதமாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 42 சதமாக பதிவாகியுள்ளது.

138 வைத்திய அதிகாரிகள் வடமாகாணத்திற்கு நியமனம் (விபரம் உள்ளே )

138 வைத்திய அதிகாரிகள் வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வைத்திய அதிகாரிகள் நியமனம் தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளக பயிற்சியை நிறைவுசெய்த வைத்திய அதிகாரிகளுக்கு கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள்.

இதில் யாழ் மாவட்டத்திற்கு 23 வைத்திய அதிகாரிகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும் வவுனியா மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும் மன்னார் மாவட்டத்திற்கு 35 வைத்திய அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 31 வைத்திய அதிகாரிகளும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிருகக்காட்சி சாலைகளில் பட்டினியால் வாடும் மிருகங்கள்

இலங்கையில் ஏற்ப்பட்டுள்ல கடும் நெருக்கடியால் தெஹிவளை, மிருகக்காட்சிசாலை உட்பட நாட்டின் ஏனைய மிருகக்காட்சி சாலைகளிலுள்ள மிருகங்களுக்கு நாளாந்தம் உணவு வழங்குவதற்குக்கூட பணம் இல்லை என மிருகக்காட்சிசாலை திணைக்கள அதிகாரிகள், விவசாய, வன ஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவித்துள்ளனர்.

இந்தத் தகவலை வன ஜீவராசிகள் திணைக்களத்தில் நேற்று 31 ஆம் திகதி நடைபெற்ற பேச்சின்போது , மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு உல்லாச பயணிகளின் வருகை பெருமளவில் குறைந்துள்ளது.

மேலும் உணவு வகைகளின் விலைகள் பெருமளவு உயர்ந்துள்ளதாலும் மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு வழங்குவதற்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.