Home Blog

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என சுதந்திரக் கட்சி சார்பாக கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்

குறைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கத் தவறியதன் காரணமாக நாடு நாளாந்தம் அராஜகத்தை நோக்கிச் செல்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து பிரதமரும் பதவி விலக வேண்டும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.
பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி இருக்கும்.
கார்த்திகை 1 : அலுவலகத்தில் அதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். கவனம் தேவை.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் பலிதமாகும்.
ரோகிணி : சவாலான வேலைகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நன்மை அடையும் நாள்
மிருகசீரிடம் 1, 2 : முக்கியமானவர்களின் ஆதரவுடன் உங்கள் செயலில் இன்று வெற்றி காண்பீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். எதிரி உங்களிடம் சரணடைவார்கள்.
திருவாதிரை : நேற்று இழுபறியாக இருந்த ஒரு விவகாரம் இன்று முடிவிற்கு வரும்.
புனர்பூசம் 1, 2, 3 : செய்தொழிலில் முன்னேற்றமான சூழல் உருவாகும். செல்வாக்கு அதிகரிக்கும்

கடகம் : புனர்பூசம் 4 : பிள்ளைகளின் நலன் குறித்த யோசிப்பீர்கள். நிதிநிலை உங்களுக்கு சாதகமாகும்.
பூசம் : உங்களுடைய தொழிலில் செல்வாக்கு உயரும். யோகமான நாள்.
ஆயில்யம் : திட்டமிட்டிருந்த ஒரு வேலை மற்றவர் உதவியுடன் இன்று நிறைவேறும்.

சிம்மம் : மகம் : திடீர் பயணம் உண்டாகும் என்றாலும் அதனால் நன்மை அடைவீர்கள்.
பூரம் : பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
உத்திரம் 1: உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடத்தை சரி செய்வீர். தடை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : கடவுள் அருளால் வாழ்க்கைக்கு தேவையான தைரியமான ஒரு முடிவை எடுப்பீர்கள்.
அஸ்தம் : அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உங்களுடைய திறமை வெளிப்படும்.
சித்திரை 1, 2 : சுற்றி இருப்பவர்களில் நல்லவர், கெட்டவர் யார் என்று தெரிந்து கொள்வீர்கள்.

துலாம் : சித்திரை 3, 4 : தொழிலில் இழுபறியாக இருந்து வந்த வேலை முடிவிற்கு வரும்.
சுவாதி : வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு.
விசாகம் 1, 2, 3: உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் நன்மை உண்டாகும்

விருச்சிகம் : விசாகம் 4 : இன்று எளிதாக முடிய வேண்டிய வேலையை சற்று சிரமப்பட்டு முடிப்பீர்கள்.
அனுஷம் : ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய மனம் குழப்பமடையும்
கேட்டை : எதிர்பார்த்த செயல் தாமதம் அடையும். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

தனுசு : மூலம் : நெருக்கமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். நிதானம் தேவை.
பூராடம்: மறைமுக பிரச்னையால் தொல்லை. எதிர்பார்த்த செயலில் தடை உண்டாகும்.
உத்திராடம் 1 : வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்லவும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : விவேகத்துடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம் : நேற்றைய கடனை இன்று அடைப்பீர்கள். செயலில் தீவிரம் காட்டுவீர்கள்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றி நினைத்ததை சாதிப்பீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளைக் கையாள்வீர்கள். முயற்சி லாபமாகும்.
சதயம் : நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி 1, 2, 3 : அதிகாரிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4 : வராமல் போன பணம் இன்று உங்கள் கைக்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் தீரும்.
உத்திரட்டாதி : வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை மாறும். பரபரப்பான நாள்.
ரேவதி : நடக்காது என்று நினைத்த செயல் ஒன்று இன்று நிறைவேறும். மன அழுத்தம் குறையும்.

மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம்

தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் மூடப்பட்டால் விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட வேண்டும் என்பதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசரமாக தரையிறங்குவதற்கான மேலதிக விமான நிலையமாக மத்தள விமான நிலையத்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-06-2022)

மேஷம்: அசுவினி : இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயலில் தடை ஏற்பட்டு பின்னர் நிறைவேறும்.
பரணி : பணியிடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நற்பெயர் எடுப்பீர்கள்.
கார்த்திகை 1 : புதிய முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை சற்று தாமதமாக கிடைக்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : உங்களுடைய குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரோகிணி : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும். விறுவிறுப்பு அதிகரிக்கும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : பெரியோரின் ஆதரவால் உங்களுடைய செல்வாக்கு உயரும்.
திருவாதிரை : விரைவாக செயல்பட்டு ஒரு நற்ச்செயலை செய்து முடிப்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: உங்களுடைய ஆலோசனைக்கு பணியிடத்தில் நல்ல மதிப்பு உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 4 : நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று வந்து சேரும்.
பூசம் : நீங்கள் நினைத்த செயலை இன்று நண்பர்கள் உதவியால் நிறைவேற்றுவீர்கள்.
ஆயில்யம் : உங்களை விட்டு விலகி இருந்த உறவினர் திரும்ப வந்து இணைவார்கள்.

சிம்மம் : மகம் : தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் தோன்றி மறையும். அமைதி தேவை.
பூரம் : உத்தியோகத்தில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றும். எச்சரிக்கை அவசியம்.
உத்திரம் 1: பழைய கடன் சங்கடப்படுத்தும். வியாபாரத்தில் கூடுதல் முயற்சி தேவை.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : உங்களுடைய செயல் எளிதில் நிறைவேறும். புதிய பொருள் சேர்க்கை உண்டு.
அஸ்தம் : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள்
சித்திரை 1, 2 : குடும்பத்தினருடன் நண்பர்கள் விருந்திற்கு சென்று வருவீர்கள்.

துலாம் : சித்திரை 3, 4 : தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து செயல்படுவீர்கள்.நிம்மதியில் திளைப்பீர்கள்.
சுவாதி : புதிய வேலைக்கு முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3: உங்களுடைய தன்னம்பிக்கையால் நினைத்த செயலில் வெற்றி அடைவீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4 : உங்கள் நினைப்பிற்கு மாறாக குடும்பத்தில் சில செயல்கள் நடைபெறும்.
அனுஷம் : ஒரு சிலருக்கு பணியாளர்களுடன் பிரச்னை உண்டாகும்.
கேட்டை : அவசர வேலைக்கு அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள்.

தனுசு : மூலம் : செலவுகள் அதிகரிக்கும் கவனத்துடன் செயல்படுங்கள். சிக்கனத்தைக் கடை பிடியுங்கள்.
பூராடம் : மற்றவர்களை அனுசரித்து செல்வதால் முயற்சி வெற்றி பெறும்.
உத்திராடம் 1 : எதிர்பாராத பயணத்தால் அலைச்சல் உண்டாகும்.இருப்பினும் நன்மை உண்டாகும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : உங்களுடைய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவோணம் : எதிர்பாராத பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
அவிட்டம் 1, 2 : குடும்பத்தினரின் விருப்பங்களை இன்று நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
சதயம் : பணியிடத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3 : வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உங்களுடைய முயற்சியால் லாபம் உண்டாக்கும்.

மீனம் : பூரட்டாதி 4: நேற்றைய பிரச்னையை தீரும். குடும்பத்தில் அமைதி கிடைக்கும்.
உத்திரட்டாதி : உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். புதிய நட்பினால் எண்ணம் நிறைவேறும்.
ரேவதி : நீங்கள் மேற்கொண்ட செயலில் வெற்றி உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது.

தமது நாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த பயண கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது.

இருப்பினும் பொருளாதார நிலை, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பாக தொடர்ந்து காண்காணித்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை வெளியிட்டு பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

யாழ் வடமராட்சியில் – முகமூடி கொள்ளை தாக்குதலில் மூவர் காயம் நகை கொள்ளை!

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்களுடன் வீடொன்றினுள் நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்ற நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகங்களை மறைத்தவாறு,வாளுகளுடன் வீட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.

ஏனையவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருந்த 10 பவுண் நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (12-06-2022)

மேஷம் : அசுவினி : மாலையில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். சிறு சிறு பிரச்னை தோன்றும்.
பரணி : நேற்று நினைத்த செயலை இன்று செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கார்த்திகை 1 : குடும்ப தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சந்தோஷம் உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : தம்பதியர்களிடம் இருந்து வந்த பிரச்னை மறையும் நாள்.
ரோகிணி : நண்பர்களின் துணையுடன் புதிய செயல் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : உங்களுடைய உயர்ந்த எண்ணம் இன்று நிறைவேறும் நாள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : உங்களுக்கு புதிய உற்சாகம் தோன்றும். கோயில் தரிசனம் மேற்கொள்வீர்கள்.
திருவாதிரை : குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : பணியிடத்தில் அமைதியாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.

கடகம் : புனர்பூசம் 4 : புதிய செயலுக்கு திட்டமிடுவீர்கள். திருப்புமுனையான நாள்.
பூசம் : குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டு.
ஆயில்யம் : உறவினர் ஒருவர் உங்கள் உதவியை நாடி வருவர். செல்வாக்கு உயரும்.

சிம்மம் : மகம் : பணியிடத்தில் விவேகமாக செயல்படுவீர்கள். லாபம் அதிகரிக்கும்.
பூரம் : தொழிலில் இருந்து வந்த சிக்கலை சரி செய்வீர்கள். நிம்மதியான நாள்.
உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
அஸ்தம் : குடும்ப நிதிநிலை குறித்த சிந்தனை மேலோங்கும். புதிய முயற்சிக்கு யோசிப்பீர்கள்.
சித்திரை 1, 2 : மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். பொது இடத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம் : சித்திரை 3, 4: உங்கள் அணுகுமுறையால் நேற்றைய பிரச்னை இன்று முடிவுக்கு வரும்.
சுவாதி : பணியிடத்தில் நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
விசாகம் 1, 2, 3 : குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும்.

விருச்சிகம் : விசாகம் 4 : பிள்ளைகளின் கல்வி தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அனுஷம் : குடும்ப செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
கேட்டை : வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.

தனுசு : மூலம் : எதிர்பார்த்த பணம் உங்கள் வீடு தேடி வரும். லாபகரமான நாள்.
பூராடம்: உங்கள் செயல்களில் விவேகம் இருக்கும். விழிப்புடன் செயல்படுவீர்கள்.
உத்திராடம் 1: குடும்பத்தினரிடம் ஏற்பட்ட பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : தொழிலை விருத்தி செய்வதற்காக புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.
திருவோணம் : வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் ஏற்படும் நாள்.
அவிட்டம் 1, 2: நேற்று நினைத்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4: உறவினர்கள் ஆதரவுடன் உங்களுடைய முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம் : உங்களுடைய எண்ணம் ஒன்று நிறைவேறும். விரும்பியதை அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : கோயிலுக்கு சென்று வருவீர்கள். உங்கள் மனம் இன்று அமைதியை நாடும்.

மீனம் : பூரட்டாதி 4 : வெளியூர் பயணங்களால் சிரமம். அலைச்சலும், செலவும் அதிகரிக்கும்
உத்திரட்டாதி : உங்கள் உடல் சோர்வடையும். ஆரோக்யத்தில் கவனம் தேவை
ரேவதி : உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்கள் மீது இன்று கோபம் கொள்வார்கள்.

ஆபாசப் பயில்வான் ரங்கநாதன் கைதாவாரா?

நாளுக்கு நாள் பயில்வான் ரங்கநாதன் மீது புகார்கள் குவிந்தும், வலுத்தும் வரும் நிலையில், அவர் கைதாவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பத்திரிகையாளராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் பயில்வான் ரங்கநாதன்.. இவர் இப்போதைக்கு எந்த பத்திரிகையிலும் வேலை பார்க்கவில்லை என்றே தெரிகிறது. அதேசமயம், பெரிதாக எந்த படத்திலும் நடித்தும் வரவில்லை.

அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்தி வருகிறார்.. இவர் சொல்லும் கிசு கிசு தகவல்களை பெறுவதற்காக, ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்ட இவரை பேட்டி எடுத்து வருகின்றன.. அதற்காக ஒரு கணிசமான தொகையை கொடுக்கவும் தயாராக இருக்கின்றன..

“நீ யார் இன்னொருத்தர் படுக்கையறையை எட்டிப்பார்க்க? நீ யார் அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் பேசுவதற்கு?” தயாரிப்பாளர் கே.ராஜன் போன்றோர் எச்சரித்திருந்த நிலையில், நியாயமான பதில் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை.. இதற்கெல்லாம் ஒரே காரணம், மக்களின் ரசனைகள் மலிந்து கிடப்பதுதான்.. பயில்வான் போடும் வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கிறார்கள்.. மற்றொரு பக்கம் பயில்வானையும் திட்டுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆரை தவிர யாரும் யோக்கியர் கிடையாது.. நான் யாரை பற்றியும் ஆபாசமாக பேசவில்லை. சட்டத்திற்கு உட்பட்டே பேசுகிறேன்” என்று பயில்வான் விளக்கம் தருகிறார்.. இன்று பாடகி சுசித்ரா கொந்தளித்துள்ளதுபோல், நடிகர், நடிகைகள் அன்றே கொந்தளிக்கவில்லை..

ஏற்கனவே இவர் மீது ராஜன் மற்றும் இயக்குநர் திருமலை ஆகியோர் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தாலும், தற்போது சுசித்ரா அளித்துள்ள புகார் காரணமாக பயில்வான் ரங்கநாதனுக்கு பிடி இறுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

பயில்வான் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.. “தனிமனித ஒழுக்கம்” என்பது எல்லா கால கட்டத்திலும், எல்லா நபர்களுக்கும் அவசியமானது.. அதை தவறும் பட்சத்தில், மக்களின் மதிப்பை நேரடியாகவே இழந்து விடுகிறார்கள்..

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் கத்திக்குத்து – இருவர் படுகாயம்

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பொன்னாலையை சேர்ந்த 57 வயதுடைய கி.பூபாலரத்தினம் மற்றும் 41 வயதுடைய பகிரதன் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுளது.

இலங்கையில்மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!!

இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தமது உறுப்பு நாடுகளிடம் 47 மில்லியன் டொலர் நிதி உதவியை கோரியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே செலுத்த வேண்டிய நிதி நிலுவை 51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது தவிர, 56 ஆயிரம் சிறார்கள் பாரிய போஷாக்கின்மையற்ற நிலையில் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான ஜென்ஸ் லெயிர்க்கி சுட்டிக்காட்டியுள்ளார்.