அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 7.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தென்னிலங்கையை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 7.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தென்னிலங்கையை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணார்தன தெரிவித்துள்ளார்.
சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் சாதாரண முகமூடிகளை அணியலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு அல்-கய்தா எதிர்வினையாற்றி உள்ளது.
முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம் எனவும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் எனவும், அல்-கய்தா எச்சரித்துள்ளது.
இந்திய துணைக்கண்டத்தின் அல்-கய்தா அழைத்துக்கொள்ளும் இந்த ஜிகாதி குழு உருது மற்றும் ஆங்கிலத்தில் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை, அதன் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களான டெலிகிராம், ராக்கெட்சாட், சிர்ப்வயர் ஆகியவற்றில் வெளியிட்டது.
முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது. இத்தகைய விவகாரத்திற்கு கண்டன வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வருத்தத்தின் மூலமாகவோ எதிர்வினையாற்றப்படாது எனவும் அவை வன்முறை தாக்குதல்கள் மற்றும் பதிலடியால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மல்லாவி திருநகர் பகுதியில் மதுபான விருந்தொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அதே இடத்தை சேர்ந்த மேலும் நால்வர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் தஜீவன் (வயது-31) என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இழுவை படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்ரேலிய எல்லைக் காவலர்களால் கைப்பற்றப்பட்டு, அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
சுமார் 19 நாட்களுக்கு முன்னர் இழுவை படகில் பயணித்த அவர்கள், அவுஸ்ரேலிய கடற்கரைக்கு அருகாமையில் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.40 மணியளவில் அவுஸ்ரேலிய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இந்த குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசியல் மற்றும் அரச நிர்வாகம் ஆகிய இரண்டிலும் இதுவரையில் பங்கெடுத்து வந்த தான், இனி எந்தவொரு அரச நிர்வாக பதிவிகளையும் வகிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக தகுதிவாய்ந்த ஒருவரை நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தன்னை தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேஷம் : அசுவினி: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும்.
பரணி: மறைமுகத் தொல்லை விலகும். பண வரவால் குடும்ப நெருக்கடி அகலும்.
கார்த்திகை 1: உற்சாகமாக செயல்படுவீர். இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும்.
ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: யோசித்து செயல்படுங்கள். முயற்சியில் இழுபறி நிலை இருக்கும்.
ரோகிணி: வீட்டில் பிரச்னை வந்து விலகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பாராட்டுவர்.
மிருகசீரிடம்1,2: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
மிதுனம் : மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் பிரச்னை உருவாகும். உறவினர் விலகிச் செல்வர். நிதானம் தேவை.
திருவாதிரை: மனம் அலை பாயும். செயல்களில் கவனம் தேவை. நண்பரால் ஆதாயம் உண்டு.
புனர்பூசம்1, 2, 3: தொழிலில் லாபம் குறையும். அரசு வழியில் நெருக்கடி இருக்கும்.
கடகம் : புனர்பூசம் 4: எதிர்பார்த்த பணம் வரும். இன்று மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக அமையும்.
பூசம்: செல்வாக்கு உயரும். தந்தை வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
ஆயில்யம் சகோதரர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பொன் பொருள் சேரும்
சிம்மம் : மகம்: கவனக் குறைவால் இழப்புகளை சந்திப்பீர்கள். நிதானமாக செயல்படுங்கள்.
பூரம்: உறவினர் தேடி வருவர். செல்வாக்கு உயரும். தள்ளிப்போன செயல்கள் முடியும்.
உத்திரம் 1: அரசு வழியில் பிரச்னையை சரி செய்வீர்கள். பணம் பல வழிகளில் செலவாகும்.
கன்னி : உத்திரம் 2, 3, 4: எதிர்பார்ப்பு நிறைவேறும். சாதகமான நிலை உருவாகும். பணவரவு திருப்தி தரும்.
அஸ்தம்: அலுவலகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பர். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும்.
சித்திரை 1, 2: நீண்ட நாள் கனவு நிறைவேறும். மனக்குழப்பம் தீரும். ஆதாயமான நாள்.
துலாம் : சித்திரை 3, 4: அலைச்சல் அதிகரிக்கும். சிலர் வெளியூர் செல்வர். செலவுகள் உண்டாகும்.
சுவாதி: வீடு, வாகன வகையில் செலவு கூடும். எதிர்பார்த்த வரவில் இன்று தடையுண்டாகும்.
விசாகம் 1, 2, 3: குழப்பம் மேலோங்கும். முயற்சியில் தடுமாற்றம் வரலாம். கவனம் தேவை.
விருச்சிகம் : விசாகம் 4: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வேலைகளில் இருந்த தடைகள் அகலும்.
அனுஷம்: முயற்சி வெற்றி பெறும். திடீர் பண வரவால் சங்கடம் விலகும். யோகமான நாள்.
கேட்டை: புதிய முயற்சியில் லாபம் காண்பீர்கள். உங்களுடைய திறமை பிறரால் மதிக்கப்படும்.
தனுசு : மூலம்: முக்கியமான வேலை ஒன்று முடியும். நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறும்.
பூராடம்: புதிய தொழில் முயற்சியில் இறங்குவீர்கள். அரசு வகையில் நல்ல செய்தி வரும்.
உத்திராடம் 1: போட்டியாளர் சதியை முறியடித்து முன்னேறுவீர்கள். செல்வாக்கு உயரும்.
மகரம் : உத்திராடம் 2, 3, 4: முயற்சியில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகும். வரவு அதிகரிக்கும்.
திருவோணம்: குல தெய்வ அருளால் முயற்சி பலிதமாகும். எதிர்பார்த்த ஒன்றை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: இழுபறியாக இருந்த முயற்சி விஐபிகளின் ஆதரவுடன் நிறைவேறும்.
கும்பம் : அவிட்டம் 3, 4: செயலில் தடுமாற்றம் உண்டாகும். எதிர்பார்ப்பு இன்று தள்ளிப் போகும்.
சதயம்: குழப்பம் உண்டாகும். மற்றவர் செயலால் சங்கடப்படுவீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
பூரட்டாதி 1, 2, 3: எதிரி தொல்லை கூடும். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது.
மீனம் : பூரட்டாதி 4: அரசு வழி முயற்சிகள் அனுகூலமாகும். நண்பரால் உதவி உண்டு. .
உத்திரட்டாதி: விருப்பம் இன்று நிறைவேறும். மனதை வாட்டிய பிரச்னை விலகும்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை நோக்கி சீனா தனது மூலோபாய கவனத்தை மாற்றுவதாகத் தெரிகிறது. நிதி சிக்கலில் உள்ள தெற்காசிய நாடுகள் பெய்ஜிங்கில் இருந்து அதே கவனத்தைப் பெறவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் கருத்துக்களுக்குப் பதிலளித்த ஜாவோ, ஒரு நல்ல அண்டை நாடு என்ற வகையில், சீனா இலங்கை மக்களுக்கு 500 மில்லியன் யுவான் (சுமார் 74.9 மில்லியன் டாலர்) மனிதாபிமான உதவி உட்பட பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.
பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியின் நேர்மறையான போக்கைப் பேணவும் மக்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வரவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக டீசல் மற்றும் பெட்ரோல் குறைந்த அளவிலேயே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வரவுள்ள எரிபொருள் தாங்கிய கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
அதற்கு முன்னதாக மேலும் இரண்டு எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அதற்கான கொடுப்பனவுகளுக்கு தேவையான நிதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
தொலைபேசி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.
இலங்கைக்கும் ஊழியர் மட்டத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் முடிவிலேயே நிதி உறவுப் பேச்சுக்கள் தங்கியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து ஊழியர் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்ய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.