பிந்திய செய்திகள்

தமிழர்களின் பொக்கிஷம் எரியூட்டப்பட்டு 41 ஆண்டுகள்-அனுஷ்டிக்கப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு

இன்றைய 01.06.2022 தினம் யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டதன் 41 ஆவது வருட நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ். பொதுசன நூலகம் 1981 ஆம் ஆண்டு எரியூட்டப்பட்டு சிதைவடைந்த நிலையில், அது மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் நூலகம் எரியூட்டப்பட்ட தன் 41ஆவது நினைவு தினம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.

தமிழர்களின் வரலாற்று சொத்தாக இருந்த யாழ் நூலகம் சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டு தமிழர்களின் வரலாற்று சொத்துக்கள் அன்று அழிக்கப்பட்டன

யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர முதல்வர், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர், யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் நூலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், நூலகம் எரியூட்டப்பட்ட சம்பவம் கேள்விப்பட்டவுடன் மாரடைப்பால் உயிரிழந்த அருட்தந்தை மற்றும் நூலக நிறுவுனரின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts