பிந்திய செய்திகள்

மனவேதனை வரும் போது பெண்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யக்கூடாது!

கஷ்டங்கள் சோதனைகளை அந்த ஆண்டவன் இந்த பூமியில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றான். அந்த பாரத்தை நம்மால் எவ்வளவு சுமக்க முடியும் என்பது அவனுக்கு நன்றாக தெரியும். ஆகவே வரக்கூடிய கஷ்டத்தை கண்டு பயப்படாதீர்கள். உங்களால் அந்த கஷ்டத்தில் இருந்து வெளிவர முடியும் என்ற நம்பிக்கையோடு கஷ்டத்தை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுடைய வாழ்க்கைக்கு நல்லது. மன வேதனை துன்பம் துயரம் வரும் போது வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் எந்தெந்த தவறை செய்யக்கூடாது. அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட என்னென்ன வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளலாம்.

முதலில் உங்களுக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் உங்களை விட்டு ஒரு கர்மா குறைந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து யாரால் கஷ்டம் வந்தது. இந்த கஷ்டம் வர காரணமாக இருந்த அந்த குறிப்பிட்ட நபரை திட்டி அவருக்கு சாபம் கொடுத்து, அவரை பழிவாங்க சென்று புதியதாக ஒரு கர்மாவை நீங்கள் தேடிக் கொள்ளாதீர்கள். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழியைத்தான் காண வேண்டுமே தவிர பிரச்சனை எதனால் வந்தது யாரால் வந்தது என்று அலசி ஆராய்ந்து குழப்பிக் கொண்டு இருக்கக் கூடாது. இது முதல் விஷயம்.

இரண்டாவதாக வீட்டில் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் வீட்டில் இருக்கும் பெண்கள் தலையில் அடித்துக்கொண்டு, வயிற்றில் அடித்துக்கொண்டு, ஐயோ! என்று சொல்லி அழுது புலம்பும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். ஒரு வீட்டில் அப்படி செய்யவே கூடாது. நடந்த தவறை மீண்டும் மீண்டும் புலம்பி அழும் போது, அந்த கஷ்டத்தை திரும்பத் திரும்ப நம்முடைய உறவினர்களிடம் சொல்லி பகிரும் போது, அந்த கஷ்டம் நமக்கு இரட்டிப்பு சுமையை கொடுத்துவிடும். கஷ்டம் வந்திருச்சா அதை அப்படியே விட்டு விட்ருங்க. தானா வந்த கஷ்டம் தானா சரியாயிடும்.

இதே போல தான் நிறைய பேர் வீடுகளில் ஏதாவது பெரிய பிரச்சினை வந்துவிட்டால், இறந்த முன்னோர்களை திட்டுவார்கள். இறந்த முன்னோர்களை திட்டவோ, அவர்களை பழிக்கவோ கூடாது. இறந்த முன்னோர்கள் நம்முடைய கடவுள். அவர்களை நினைத்து இந்த பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது.

பிரச்சனை வந்துவிட்டதா அதை முதலில் இறைவனின் பாதங்களில் இறக்கி வைத்து விடுங்கள். இந்த பிரச்சனையிலிருந்து எப்படியாவது என்னை வெளியே கொண்டு வருவதற்கு தைரியத்தை கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டினருகில் எந்த கோவில் இருந்தாலும் அந்த கோவிலுக்கு சென்று உங்களுடைய மனதை சாந்தப் படுத்தி கொள்ளுங்கள்.

குறிப்பாக வீட்டின் அருகில் ஏதாவது சித்தர்கள் சமாதி அடைந்த கோவில்கள் உள்ளதா என்று பாருங்கள். அந்த இடத்திற்குப் போய் அமர்ந்து உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார தியானம் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுடைய குழப்பங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் ஒரு தெளிவு பிறக்கும்.

மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பார்த்தால் உங்களுக்கே புரியும். நம்பிக்கையோடு செய்யக்கூடிய வழிபாடு நமக்கு சீக்கிரம் நல்ல பலனைக் கொடுக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts