பிந்திய செய்திகள்

உங்கள் கையை அதிஷ்டம் இல்லாத கை என்று கூறுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள்!

நிறையப் பேருக்கு அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்ற பெயர் இருக்கும். அவர்களுடைய கையால் எதை தொட்டாலும் துளங்காது என்று சொல்லுவார்கள். சில பேருக்கு இப்படிப்பட்ட பட்டத்தை நாம் கூட கொடுத்திருப்போம்.

அதாவது இவங்க வந்தாலே விளங்காது. இவர்கள் கைப்பட்ட பொருள் விற்காது. இவர்கள் கையால் எது தொட்டாலும் அது நாசமாகப் போய்விடும் என்று கூட சிலர் சொல்லுவார்கள். ஆனால் இறைவனது படைப்பில் எல்லா மனிதர்களுமே சமம்தான்.

ஏற்றத்தாழ்வுகள் என்பது கட்டாயம் கிடையாது. அவரவருடைய கர்ம வினைக்கு ஏற்ப அவரவருடைய செயல்களில் சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்குமே தவிர, ஒட்டு மொத்தமாக ஒருவருடைய மனது புண்படும்படி நாம் எப்போதுமே பேசிவிடக் கூடாது என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று நீங்கள் இதுவரை யாரையாவது திட்டி, அடுத்தவர்களுடைய மனது புண்படும்படி பேசியிருந்தால் அவர்களிடம் நேராக சென்று மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்.

இந்த அதிர்ஷ்டத்தை நம் கையால் வளைத்து போடுவது எப்படி? தெரிந்து கொள்ளலாமா? நீங்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்களேன். இதை எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம். இரண்டு உள்ளங்கைகளிலும் ஏதாவது அடைப்பு இருந்தால் தான் இந்த பிரச்சனை இருக்கும். அந்த அடைப்பை சரி செய்து விட்டால் போதும். நீங்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்.

கொஞ்சமாக கல் உப்பை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு இடத்தில் உங்களுடைய வீட்டிலேயே கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளலாம். பூஜை அறையில் அமர்ந்து கொண்டால் தவறில்லை. வரவேற்பறையில் அமர்ந்து கொண்டாலும் சரி தான்.

முதலில் வலது கையால் 1 ஸ்பூன் உப்பை எடுத்து, இடது உள்ளங்கைகளில் வைத்து அந்த கல் உப்பை அப்படியே லேசாக உள்ளங்கையில் வட்ட வடிவில் கல் உப்பை பரப்பி, அப்படியே வட்டவடிவில் உங்கள் வலது கையாலேயே ஒரு நிமிடம் போல தேய்த்துக் கொடுங்கள். பிறகு கையில் இருக்கும் உப்பை அப்படியே தண்ணீரில் போட்டு கரைத்து விடுங்கள்.

அடுத்தபடியாக இடதுகையால் உப்பை எடுத்து, வலது உள்ளங்கையில் வைத்து இடது கையை கொண்டு வலது கையில் இருக்கும் உப்பை அப்படியே லேசாக வட்ட வடிவில் செய்து கொடுக்கப் போகிறீர்கள். அவ்வளவு தான். இந்த உப்பையும் தண்ணீரில் கரைத்து விடுங்கள். உப்பு கரைத்த தண்ணீரை சிங்கிள் கொட்டி விடுங்கள்.

மாற்றி மாற்றி இரண்டு உள்ளங்கைகளையும் உப்பு போட்டு தேய்த்து கழுவ போகிறீர்கள். அவ்வளவு தான். உங்களுடைய உள்ளங்கைகளில் இருக்கக்கூடிய அடைப்பு சரியாகிவிடும். பின்பு நீங்கள் தொட்டதெல்லாம் துளங்க ஆரம்பித்துவிடும். நீங்களும் அதிர்ஷ்ட சாலியா மாறுவீர்கள். உங்கள் கைக்கு பணம் வரும். பணம் தங்கும்.

உங்கள் கையால் நீங்கள் யாருக்காவது பணம் கொடுத்தாலும் அது இரண்டு மடங்கு பெருகும் என்றால் பாருங்களேன். இது முற்றிலும் உண்மையான பரிகாரம். வாரத்தில் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. அதிர்ஷ்டம் கெட்டவர்களாக இருக்கும் நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் ஆக மாறுவீர்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts