பிந்திய செய்திகள்

வியாழக்கிழமை நெற்றியில் இந்த திலகத்தை இட்டுக் கொண்டால்
யோகம் உங்களைத் தேடி வரும்

வியாழக் கிழமை காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு முடிந்தால் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு, பெண்களாக இருந்தால் தலையில் மஞ்சள் நிறப் பூ வைத்துக்கொண்டு, உங்கள் வீட்டு பூஜையறையில் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் குருபகவான் தட்சிணாமூர்த்தி இவர்களின் படம் இருந்தால் அதற்கு மஞ்சள் நிறப் பூ வைப்பது மிகவும் சிறப்பு. (விருப்பமிருப்பவர்கள் ஆண்களும் இந்த பூஜையை செய்யலாம் தவறு கிடையாது.)

பூஜை அறையில் ஒரு விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான மஞ்சள் தூள் 1 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சளில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நசுக்கி கலந்து கொள்ள வேண்டும். மஞ்சள் இன்னும் கொஞ்சம் வாசனையாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் பச்சை கற்பூரத்திற்க்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இந்த மஞ்சள் கிண்ணத்தை உங்களுடைய கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது இடது உள்ளங்கையில் இந்த மஞ்சள் கிண்ணம் இருக்க வேண்டும். வலது உள்ளங்கையை மஞ்சள் கிண்ணத்தின் மேலே வைத்து மூடி கொண்டு, பூஜை அறையில் நீங்கள் வடக்குப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, ‘ஓம் ஸ்ரீகுருவே நமஹ!’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி குரு பகவானை மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் கடன் சுமை பண கஷ்டம் எல்லாம் தீரவேண்டும் என்று மந்திரத்தை உச்சரித்து விட்டு தியான நிலையில் அமர்ந்து வேண்டுதல் வைக்க வேண்டும்.

அதன் பின்பு கிண்ணத்தில் இருக்கும் மஞ்சளை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். இந்த திலகத்தை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். அதாவது அடுத்த வியாழக்கிழமை வரும் வரை உங்களுக்கு தேவையான மஞ்சளை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த வாரம் வியாழக்கிழமை வரும்போது இதே போல பூஜை செய்து மஞ்சளை புதியதாக தயார் செய்து மீண்டும் நெற்றியில் இட்டு வர வேண்டும்.

இப்படியாக 11 வாரங்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்து இந்த திலகத்தை நெற்றியில் வைத்து வர உங்களுடைய பணக்கஷ்டம் கூடிய சீக்கிரத்தில் தீரும். குருபகவானை முழுமையாக நம்புங்கள். பண கஷ்டத்தில் இருந்து விடுபடுவீர்கள். இதோடு மட்டுமல்லாமல் இந்த பரிகாரமானது உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய சுபகாரிய தடையையும் விளக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து நிறைவான பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts