பிந்திய செய்திகள்

தூங்கும் அறையில் பெண்கள் இந்த 1 பொருளை வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது!!!

தூங்கும் அறையில் பெண்கள் தங்களுடன் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொண்டு தூங்கச் செல்லக் கூடாது. இந்த ஒரு உலோகத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் சக்தி இரவில் அதிகம் இருப்பதால் இதை எந்த காரணம் கொண்டும் பெண்கள் தலையணைக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.

தூங்கும் பொழுது பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றிய சிந்தனை இருந்து கொண்டு இருந்தால் அது மறுநாள் வரை தொடர்ந்து அவர்களுடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இரவு தூங்கும் பொழுது அந்த பிரச்சினைகளை எல்லாம் கழட்டி வைத்து விட்டு நிம்மதியான உறக்கம் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மறுநாள் முழுவதும் உற்சாகத்துடன் காண முடியும்.

ஒரு ஆண் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அதை இரவில் சுமந்து கொள்வதில்லை! ஆனால் பெண்கள் அப்படி அல்ல, நாள் முழுவதும் எதையும் காட்டிக் கொள்ளாமல் இரவு தூங்கும் நேரத்தில் எல்லாவற்றையும் மண்டைக்குள் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பார்கள். அப்படியான ஒரு நேரத்தில் உங்களுடன் இந்த ஒரு பொருள் இருந்தால் இது இன்னும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

சனி பகவானுடன் தொடர்புடைய இந்த உலோகம் இரும்பு ஆகும். இரும்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் பெண்கள் தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தலைக்கு நேரே வைத்துக் கொண்டு கட்டாயம் படுக்கக் கூடாது. இரும்பாலான பொருளில் தண்ணீர் வைத்துக் கொண்டு தூங்குவது, தலையில் இரும்பு பொருட்களை போட்டு கொண்டு தூங்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.

ஹேர் பின், கிளிப் போன்ற பொருட்கள் கூட இரும்பு என்கிற உலோகத்தாலானதாக இல்லாமல் பிளாஸ்டிக்கால் இருந்தால் நல்லது. இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் உங்களுடைய உடலில் அல்லது தலைக்கு நேராகவும் கண்டிப்பாக இருப்பதை தவிர்க்க வேண்டும். இரும்பு ஒரு விதமான அலைகளை உண்டு பண்ணக் கூடியது. இதில் இருந்து வரக்கூடிய அலைகள் நம் எண்ண ஓட்டத்தை மேலும் கிளர்ச்சியடைய செய்யும். இதனால் ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் பெண்களுக்கு இது இன்னும் கொஞ்சம் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் நல்ல தூக்கம் நிச்சயம் வராது. மறுநாளும் உற்சாகத்துடன் நீங்கள் காணப்பட மாட்டீர்கள்.

திருமணமான பெண்கள் திருமாங்கல்யம் அணிந்து இருந்தால் அந்த திருமாங்கல்யத்துடன் இரும்பு பொருட்களை சேர்க்க கூடாது என்கிற நியதியும் உண்டு. இரும்பு பொருட்கள் மாங்கல்யடத்துடன் இருந்தால் அது உங்களுக்கு குடும்ப உறவுக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகளையும், கருத்து வேறுபாடுகளையும் அதிகரிக்க செய்து விடும். எனவே பின், ஊக்கு போன்றவற்றை மாங்கல்யடத்துடன் சேர்த்து வைத்திருப்பது ரொம்பவே தவறான செயலாகும்.

அது மட்டுமல்லாமல் தங்கத்துடன் அணியும் இந்த பொருட்கள் தங்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தலைமாட்டில் வைத்து விட்டு நிம்மதியான உறக்கத்தை தேட வேண்டாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts