பிந்திய செய்திகள்

தினமும் வரக்கூடிய இந்த 1 நிமிடத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைத்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்.

இருபத்தி நான்கு மணி நேரமும் பூமி சுழன்று கொண்டு தான் இருக்கின்றது. நாமும் ஒவ்வொரு வினாடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் வருடத்தையும் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றோம்.

இப்படி நாம் கடந்து செல்லும் இந்த காலகட்டத்தில் ஒரு சில நிமிடங்கள் நமக்கு அற்புதமான பலன்களைக் கொடுக்கக் கூடியவை. நினைத்ததை அடைய வேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வேண்டுதல் வைக்க வேண்டும் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

இது தவிர்த்து இன்னும் ஒரு சிறப்பு வாய்ந்த நேரமும் நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்போனால் பிரம்ம முகூர்த்த நேரத்தை விட அதிசக்திவாய்ந்த அந்த ஒரு நிமிடம் இது. அந்த நிமிடம் எப்போது வருகின்றது. அந்த நேரத்தில் விரும்பியதை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான சில குறிப்புகளை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

இந்த நேரம் பிரம்ம முகூர்த்த நேர கணக்கில் நிச்சயமாக வராது. இதை அமுத நேரம் என்று சொல்லுவார்கள். அதாவது அதிகாலை வேளை 3:00 மணியிலிருந்து 3:01 வரை ஒரு நிமிடம் தான் இந்த அமுத நேரம் இருக்கும். இந்த ஒரு நிமிடத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்வது.

3.00 மணிக்கு நாம் தியானத்தில் அமர வேண்டும் என்றால், அதிகாலை மூன்று மணிக்கு முன்பாகவே எழுந்து நம்முடைய வாயை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதாவது பல் தேய்த்துக் கொண்டு முகத்தை மட்டும் கழுவிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு உங்களுடைய வீட்டில் கிழக்கு பார்த்தவாறு எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் அமர்ந்து கொள்ளுங்கள். இந்த ஒரு நிமிடத்தில் உங்களுடைய மனதை ஒரு நிலைப்படுத்தி உங்களுக்கு தேவையானதை பிரபஞ்சத்திடம் கேட்டு ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்ய வேண்டும். ஒரே ஒரு நிமிடம் தான். இந்த தியானத்தை செய்து முடித்துவிட்டு அதன் பின்பு நீங்கள் தூங்கச் சென்று விடலாம்.

தினந்தோறும் அதிகாலை 3 மணிக்கு ஒரே ஒரு நிமிடம் மட்டும் கண்விழித்து இதை செய்பவர்களுக்கு கேட்டவரம் உடனடியாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உடனடியாக என்றால், இன்றைக்கு கேட்டது நாளைக்கு கிடைத்து விடுமா என்ற கேள்வி எல்லாம் எழுப்ப வேண்டாம்.

தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் நாம் ஏதாவது ஒரு குறிக்கோளை மனதில் நினைத்துக் கொண்டு இந்த நேரத்தில் பிரபஞ்சத்திடம் கோரிக்கை வைக்கும் போது, நிறைவேறாத லட்சியம் கூட கூடிய சீக்கிரத்தில் நிறைவேறுவதற்கான எல்லா வேலைகளும் நடக்கத் தொடங்கிவிடும்.

நிறைய பேருக்கு இதில் ஒரு சந்தேகம் வரும். நமக்கு கிடைப்பது ஒரு நிமிடம் தான். இதில் வேண்டிய வரங்களை பிரபஞ்சத்திடம் கேட்பதா அல்லது ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதா? 3 மணிக்கு முன்பாக ஐந்து நிமிடங்கள் உங்களுடைய ஆசைகளை, உங்களுடைய மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு குறிப்பிட்டு சொல்லப்படும் இந்த ஒரு நிமிடத்தில் உங்களுடைய மனதை அமைதிப் படுத்தி கொண்டு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும். இந்த உலகத்தில் நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமே கிடையாது.

அதற்கான திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, நம்மால் இது முடியவில்லை என்று தோற்றுப்போய் துவண்டு உட்கார்ந்து விடக்கூடாது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts