பிந்திய செய்திகள்

திருமணத் தடை நீங்கி, வெகு நாட்களாகத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் திருமணம் விரைவாக நடைபெற இதை செய்யுங்கள்

திருமணம் என்பது ஆண், பெண் இருவரை மட்டும் சேர்ந்ததல்ல. இரு குடும்பங்கள் இணைவது தான் திருமணமாகும். ஆனால் இப்பொழுது ஆண், பெண் இருவருக்கும் சரியான பொருத்தம் என்பது அமைவதில்லை. சில ஆண்களுக்கு தான் நினைத்தபடி பெண் கிடைப்பதில்லை. பெண்களுக்கு தாங்கள் விரும்பியபடி மாப்பிள்ளை கிடைப்பதில்லை. எனவே பெற்றோர்களுக்கு வரன் பார்ப்பதிலேயே பல வருடங்கள் போய்விடுகிறது. அவர்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு வயதாகிறது என்ற கவலை வந்துவிடுகிறது. இவ்வாறு பல கோவில்களுக்கு செல்வதும், பரிகாரங்கள் செய்வதும் என தங்கள் துன்பத்தை மறைத்துக் கொள்கிறார்கள். அதிலும் திருமணம் ஆகவேண்டிய ஆண் மற்றும் பெண்களுக்கு அவர்களின் சங்கட நிலையை கூட மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. இவ்வாறான பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விரைவில் திருமணமாக இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும்

பிள்ளைகளின் பெற்றோர்கள் தாங்கள் சென்று வரும் இடத்திலெல்லாம் பார்ப்பவர்களிடம் தங்கள் பிள்ளைக்கு வரன் பார்க்க வேண்டும் என்று சொல்லி வைப்பது உண்டு. ஆனால் இதனை ஒரு முறை, இரண்டு முறை என்று சொல்லி விடலாம். ஆனால் பார்க்கும் பொழுதெல்லாம் இதனை சொல்லும் பொழுது நமது மனதிற்குள்ளேயே சங்கடம் தோன்றிவிடும்.

நமது எதிரில் உள்ளவர்களும் நம்மைப் பார்த்த உடனேயே நம்மிடம் இருந்து நகர்ந்து போக எண்ணுவார்கள். இவர்களைப் பார்த்தாலே அவர்களின் பிள்ளைகளுக்கு வரன் தேட சொல்லுவார்கள் என்று அவர்களுக்குள்ளேயும் தோன்றி விடும். இன்றைய நிலைமை இப்படியாக மாறி விட்டது. ஏனென்றால் எங்கு சென்றாலும் பெண் பார்க்க வேண்டும், பிள்ளை பார்க்க வேண்டும் என்ற வார்த்தைகள் தான் அடிபடுகிறது இவ்வாறான சூழ்நிலைகள் இருப்பதற்கு காரணம் அவர்களின் முன் ஜென்மத்தில் செய்த பாவமாக கூட இருக்கலாம். அல்லது அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் தோஷமாகவும் இருக்கலாம். இவற்றில் எந்த வித பிரச்சனையாக இருந்தாலும் அவற்றை சரிசெய்வதற்கு நமது முன்னோர்கள் சொல்லி வைத்த பரிகாரங்கள் துணைபுரிகின்றன

marriage

அதற்கு யாருக்குத் திருமணம் நடக்க வேண்டுமோ அவர்கள் தங்கள் கையினால் ஒரு தேங்காயை உடைத்து, அவற்றை பூவாக துருவி வைக்க வேண்டும். பிறகு தேங்காய் துருவலுடன் ஒரு கைப்பிடி வெல்ல பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது அதனை முகர்ந்து பார்க்கவோ, சுவைத்துப் பார்க்கவோ கூடாது.

அதிலும் முக்கியமாக தேங்காய் துருவலுடன் வெல்லம் தவிர சர்க்கரை, கருப்பட்டி இவை எதையும் செய்துவிடக்கூடாது. தேங்காயுடன் வெள்ளம் சேர்ப்பதன் மூலமே நாம் நினைக்கும் காரியத்திற்கான மகிமை கிடைக்கிறது. பிறகு இந்த கலவையை உங்கள் கையினால் பசு மாட்டிற்கு உணவாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் தீர்ந்து விரைவில் திருமணம் நிகழும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts