பிந்திய செய்திகள்

தண்ணீரில் இந்தப் பொருளை போட்டு குளித்தால் உங்களுடைய உடம்பை எந்த ஒரு கெட்ட சக்தியாலும் நெருங்க முடியாது.

நம்முடைய உடம்பில் தெய்வ கடாட்சம் நிறைந்து இருந்தால், நம்மை எந்த ஒரு கெட்ட சக்தியாலும் கண்திருஷ்டியாளும் நெருங்கவே முடியாது. அதாவது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள தினம்தோறும் ஏதாவது ஒரு பெரிய பெரிய பரிகாரத்தை செய்ய முடியாது. அதேசமயம் நமக்கு ஒரு பாதுகாப்பும் தேவை. காரணம் நேரம் காலம் இல்லாமல் குழந்தைகள் வயதுக்கு வந்த பெண்கள், ஆண்கள், இப்படிப்பட்டவர்கள் எல்லாம் வெளியே சென்று வரக்கூடிய சூழ் நிலையில் இருக்கின்றோம். கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் நம்மை தாக்குவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தினமும் நாம் இந்த தண்ணீரில் குளித்து வந்தாலே போதும். நம்முடைய உடம்பில் தெய்வ கடாட்சம் நிறைந்துவிடும். நம்மை எந்த கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் நெருங்க முடியாது.

பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள், கர்ப்பமாக இருப்பவர்கள், வயதுக்கு வந்த பெண்கள் இந்த தண்ணீரில் குளிப்பது அவர்களுக்கு ரொம்பவும் பாதுகாப்பானது. சரி குறிப்பை பார்த்து விடுவோம். இறை சக்தி அதிகமாக நிறைந்திருக்க கூடிய பொருட்களின் பட்டியலில் முதலில் இருப்பது பசுமாட்டில் இருந்து கிடைக்கக்கூடிய பால். பசும்பால், வேப்ப இலை, துளசி இலை, அருகம்புல், மஞ்சள் தூள் மருதாணி இலை.

இந்த பொருட்களில் எல்லாமே தெய்வ சக்தி நிறைந்து இருக்கின்றது. இந்த எல்லாப் பொருட்களையும் தண்ணீரில் போட்டு கலந்து குளிக்க வேண்டுமா என்று பயப்பட வேண்டாம். இந்த பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை தினம்தோறும் தண்ணீரில் போட்டு குளிக்க வேண்டும். அதாவது பசும்பால் (காய்ச்சாத பச்சை பால்) ஆக இருந்தால் 1 ஸ்பூன் அளவு குளிக்கின்ற தண்ணீரில் கலந்து கொள்ளலாம். மற்ற இலைகளைப் ஒரு கைப்பிடி அளவு போடலாம். அப்படி இல்லை என்றால், ஐந்து இலைகள் கிடைத்தால்கூட போதும். அதை குடிக்கிற தண்ணீரில் போட்டுக் கொள்ளலாம்.

அதாவது குளிப்பதற்கு முன்பு பக்கெட்டில் தண்ணீரை பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் மேலே சொன்ன பொருட்களில் இருந்து ஏதாவது ஒரு பொருளை போட்டு 10 நிமிடங்கள் கழித்து அந்த தண்ணீரில் நீங்கள் எப்போதும் போல குளித்துவிட வேண்டும். தலைக்கு தான் குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடலுக்கு குளிக்கும் போதும் இந்த பரிகாரத்தை செய்து வரலாம்.

குளியலறையில் நீங்கள் குளித்து முடித்த பின்பு அந்த இலை அப்படியே இருக்கும் அல்லவா. அதை அப்படியே எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள். இப்படி குளித்து வர உங்களுடைய உடம்பில் தேங்கி இருக்கக்கூடிய கெட்ட ஆற்றல், சோம்பேறித்தனம், இவைகள் எல்லாம் படிப்படியாக உங்கள் உடம்பை விட்டு நீங்க தொடங்கும். உங்களுக்கே தெரியாமல் உங்கள் உடம்பில் ஏதேனும் கட்ட சக்தி இருந்தாலும் அது உங்கள் உடம்பை விட்டு வெளியே சென்றுவிடும்.

உங்களை அறியாமலேயே உங்களுடைய முகத்தில் ஒரு தேஜஸ், ஒரு கலை வரத்தொடங்கும். அதாவது மூதேவி பிடித்த மாதிரி முகம் இருக்குது சொல்லுவாங்க இல்லையா. அதை எல்லாம் நீக்கி, லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்க கூடிய சுலபமான பரிகாரம் இது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் 48 நாட்கள் தொடர்ந்து, மேல் சொன்ன பொருட்களில் எது கிடைத்தாலும் அதில் ஒன்றை கொண்டுவந்து தண்ணீரில் போட்டு குளித்து பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts