பிந்திய செய்திகள்

தினமும் விளக்கு ஏற்றுவதற்கு முன் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள்!

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல, நம்முடைய வீட்டிலும் செல்வவளம் எடுக்க எடுக்க, செலவு செய்ய செய்ய குறையாமல் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்.

விளக்கு ஏற்றுவதற்கு முன்பு இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் செய்தால். பொதுவாகவே தினம்தோறும் சில வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.

சில வீடுகளில் செவ்வாய் வெள்ளி மட்டுமே தீபம் ஏற்றக் கூடிய பழக்கம் இருக்கும். எப்படி இருந்தாலும் சரி, நீங்கள் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு இந்த ஒரு சின்ன வேலையை செய்து விடுங்கள்.

காலை அல்லது மாலை நேரம் உங்களுக்கு எப்போது சவுகரியமாக இருக்கிறதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள்.

பெண்கள் முகத்தில் பொலிவுடன் பொட்டு இட்டுக்கொண்டு, குங்குமம் வைத்துக்கொண்டு, அதன் பின்பு தீபமேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு முறை பதிவு செய்து கொள்வோம்.

அதன் பின்பு பூஜை அறைக்கு சென்று விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு, விளக்கேற்ற தயார் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக மஞ்சள் தூள் போட்டு அதில் பன்னீர் ஊற்றி நன்றாகக் குழைத்து கொள்ள வேண்டும்.

இந்த மஞ்சளை தொட்டுக் உங்களுடைய பூஜை அலமாரி அல்லது ஸ்டாண்ட் அல்லது தரை எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் ‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும்.

இந்த வார்த்தையை எழுதுவிட்டு அதன் பின்பு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, உங்களுடைய வீட்டில் செல்வவளம் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைக்க வேண்டும்.

அடுத்த நாள் தீபம் ஏற்றுவதற்கு முன்பு பழைய எழுத்தை ஒரு துணியில் துடைத்து எடுத்துவிட்டு, மீண்டும் அந்த இடத்தில் புதியதாக இதேபோல் எழுதிவிட்டு, அதன் பின்பு தீபம் ஏற்றவேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வர உங்களுடைய வீட்டில் இருக்கும் பண கஷ்ட்டத்திற்கு படிப்படியாக விடிவு காலம் பிறக்கும்.

வருமானம் இல்லாத வீட்டில் வருமானம் பெருகும். கடன் சுமை இருக்கும் வீட்டில் கடன் பாரம் குறையும். சுப காரிய தடை இருக்கும் வீட்டில், சுப காரியங்கள் தொடர்ந்து நடக்கும். இப்படியாக எல்லா நல்லதும் பலமாக நடக்க இந்த ஒரு சின்ன பரிகாரமே போதுமானது.

பூஜை அறையில் ஸ்ரீ அக்ஷயம் என்று எழுதக்கூடிய எழுத்தை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை வைத்து எழுதச் சொல்லலாம். ஆண் குழந்தை பெண் குழந்தை யாராக இருந்தாலும் சரி, எழுத படிக்கத் தொடங்கிய குழந்தைகளாக இருந்தால், அவர்களுடைய கையில் இதை எழுதும்போது இந்த பரிகாரத்திற்கு, சக்தி இரட்டிப்பு மடங்காகக் கிடைக்கும்.

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts