பிந்திய செய்திகள்

பெண்கள் வெள்ளி அணிவதால் கிடைக்கும் நன்மைகள்…!

பெரும்பாலும் வெள்ளி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது காலில் அணியும் கொலுசு மட்டுமே . வெள்ளியில் கொலுசு மட்டும் கிடையாது, ஏகப்பட்ட பூஜை பாத்திரங்களும், சமையல் பாத்திரங்களும் கூட விற்பனைக்கு உண்டு.

வெள்ளியின் விலை குறைவு என்பதால் வெள்ளி வாங்குவது சாதாரண மக்களாலும் முடிகிறது. தங்கத்தை விட வெள்ளிக்கு ஒரு சில சக்திகள் அதிகம் உண்டு. அவை என்னென்ன? யார் எந்த விரலில் வெள்ளி நகைகளை அணிய வேண்டும்?

வெள்ளி என்கிற உலோகத்தால் ஆன எந்த ஒரு பொருளும் பெண்கள் தங்களுடைய விரல்களில் அணிந்து கொண்டால் அது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பெண்கள் வெள்ளி மோதிரத்தை அணிந்தால் உடல் குளிர்ச்சி அடையும்,

சுண்டு விரலில் வெள்ளி மோதிரம்: இந்த அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமாம் »  Neruppunews

இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விரைவாகவே மீண்டு விடுவார்கள் என்கிற நம்பிக்கை உண்டு. ஜாதக ரீதியாக எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தாலும், கையில் வெள்ளி மோதிரம் அணிந்து இருந்தால் அந்த பிரச்சினைகளிலிருந்து விரைவாகவே வெளிப்பட்டு விடலாம்.

வெள்ளி மோதிரத்தை மோதிர விரல் அல்லது நடுவிரலில் அல்லது ஆள்காட்டி விரல் ஆகிய விரல்களில் அணிந்து கொள்ளலாம். மிகக் குறைவான விலைகளில் விதவிதமாக கிடைக்கக் கூடிய வெள்ளி மோதிரங்கள் அணியும் பொழுது உடம்பின் உஷ்ணம் அதிலேயே தெரிய ஆரம்பிக்கும்.

உடம்பில் பித்தம் அதிகம் இருந்தால் அல்லது உப்புக் காற்றை அதிகம் சுவாசிப்பவர்களுக்கு விரைவாகவே வெள்ளி கறுத்துவிடும். வெள்ளி கறுகாமல் புத்தம் புதியதாக அப்படியே இருந்தால் உங்களுடைய ஆரோக்கியம் சீராக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் பெண்கள் கொலுசு அணிவதில் இப்படி ஒரு அறிவியலா?? – Netrigun

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் நெருப்பு ராசிகள் என்றும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவை நில ராசிகள் என்றும், மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள் என்றும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் நீர் ராசிகள் என்றும் ஜாதக ரீதியாக கணிக்கப்படுகிறது. இதில் நெருப்பு ராசியை சார்ந்த பெண்கள் மோதிர விரலிலும், நில மற்றும் நீர் ராசியை சார்ந்தவர்கள் நடுவிரலும், காற்று ராசியை சார்ந்தவர்கள் ஆள்காட்டி விரலிலும் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

சுக்கிர பலம் பெற்றவர்கள் வெள்ளி மோதிரத்தை அணிந்தால் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் பன்மடங்கு பெருகும். ஜாதக ரீதியாக சுக்கிரன் ஒருவருக்கு சுக போகத்தை கொடுக்கக் கூடியவர். காதல் விவகாரங்களில் தோல்வி அடையாமல் இருக்க வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். வெள்ளியிலிருந்து வெளி வரும் ஒரு சில மின் அலைகள் உடலில் இருக்கும் நரம்புகள் வழியே சென்று உடல் உள் உறுப்புகளுக்குள் இருக்கும் நோய்களையும் குணப்படுத்துகிறது.

பெண்கள் அணியும் மெட்டி, கொலுசுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?..! -  Seithipunal

திருமணமான பெண்கள் கட்டை விரலுக்கு பக்கத்தில் இருக்கும் விரலில் வெள்ளி மெட்டி அணிந்து கொண்டால் விரலில் இருக்கும் நரம்புகள் வழியே கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும் என்பது அறிவியல் உண்மையாகும் எனவே வெள்ளி மோதிரம் அணிவது என்பது சாதாரண விஷயம் அல்ல! வெள்ளி மோதிரம் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் அணிந்து கொள்ளலாம்.

Jewelry & Watches Anklets Silver or Gold Boot Anklet Boot Jewelry Chain w/  Bells

வெள்ளியில் யானைமுடி சேர்த்து செய்த மோதிரங்களும் விற்பனைக்கு உண்டு. அவற்றை உங்களுடைய ஜாதகத்தின் படி ஜோதிடர்களிடம் கேட்டு அணிந்து கொண்டால் நிறையவே நல்ல பலன்கள் ஏற்படும். வெள்ளியாலான டாலர், வெள்ளியாலான கீ செயின் பயன்படுத்துபவர்களுக்கும் சுக்ர யோகம் உண்டு. குறிப்பாக மீன் சின்னம் பொறித்த வெள்ளி கீ செயின்கள் பீரோவில் இருந்தால் கட்டுக்கட்டாக பணம் சேரும் என்கிற ஐதீகமும் உண்டு.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts