பிந்திய செய்திகள்

ஆமை புகுந்த வீடு உருப்படாதா?

‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று கூறுவார்கள். அது போல ‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் ஒன்றுதான்’ என்று கூறக் கேட்டிருப்போம். இப்படி ஆமை பற்றிய பழமொழிகள் எல்லாமே ஆமையை ஒரு துரதிர்ஷ்டசாலியாக மாற்றி வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே ஆமை புகுந்த வீடு உருப்படாதா? தசாவதாரங்களில் ஒன்றாக இருக்கும் கூர்ம அவதாரம் ஆமை அவதாரம் தானே? பின் அது எப்படி துரதிர்ஷ்டசாலி ஆகும்? ஆமை மோதிரம் அணிபவர்களுக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்று கூறப்படுவது உண்மையா?

நம் தமிழ் மொழியில் பல பழமொழிகளுக்கான அர்த்தம் சொற்பிழை காரணமாக இன்று மாறி நிற்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. பழமொழியின் சொற்பிழை அந்தப் பழமொழியின் அர்த்தத்தையே மொத்தமாக மாற்றி கொடுக்கிறது. அந்த வகையில் ஆமை புகுந்த வீடு உருப்படாது எனும் பழமொழிக்கு சொற் பிழையால் நேர்ந்த ஒரு விபரீதமான விஷயம் தான் இது!

தசாவதாரங்களில் ஒன்றாக இருக்கும் கூர்ம அவதாரம் பெருமாளுடைய ஆமை அவதாரம் ஆகும். தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைய உதவிய இந்த ஆமை மகாலட்சுமியின் பரிபூரண ஆசியைப் பெற்று உள்ளது. ஆமையை பார்த்தாலோ அல்லது ஆமை மோதிரத்தை அணிந்து கொண்டாலும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்கிற ஐதீகம் உண்டு.

இருட்டான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும், பூத்து போன மரம், வைக்கோல் மற்றும் சாணத்திலும் தோன்றுகின்ற ஒரு வகைப் பூஞ்சை தான் இந்த காளான். காளான் இருக்கும் இருட்டான பகுதியில் ஒளியும், வெப்பமும் நுழையாது. எனவே இத்தகைய வீடுகளில் மனிதனால் வசிக்க முடியாது. காளான் பூத்த வீடுகளில் வசித்தால் சுவாச பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் போன்றவை ஏற்படும் என்பதால் காளானை குறிப்பிட்டு இப்பழமொழி சொல்லப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. ‘ஆம்பி பூத்த வீடு உருப்படாது’ என்பது தான் உண்மையான பழமொழி ஆகும். இதில் ‘ஆம்பி’ என்றால் காளானை குறிக்கிறது.

‘ஆம்பி பூத்த’ என்கிற இந்த வார்த்தை காலப்போக்கில் ஆமீ பூத்த, ஆமெ பூத்த, ஆமெ பூந்த என்று மருவி ‘ஆமை புகுந்த’ என்று மாறிவிட்டது. இதனால் அதிர்ஷ்டங்கள் அள்ளிக் கொடுக்கும் ஆமை துரதிர்ஷ்டசாலியாக மக்கள் முன்னே தவறுதலாக பார்க்கப்படுகிறது. ஆமையின் உருவம் பதித்த மோதிரம் அணிந்து கொள்பவர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்குமாம்.

ஆமை உருவம் பதித்த மோதிரத்தின் பின்பகுதியில் ஆமையின் தலை இருக்கும் பகுதியில் ‘ஶ்ரீ’ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மோதிரத்தை வெள்ளிக்கிழமையில் காய்ச்சாத பாலிலும், கங்கை நீரிலும் சுத்தம் செய்து மகாலட்சுமியின் திருவடியில் வைத்து மகாலட்சுமி ஸ்தோத்திரங்களை உச்சரித்து பின்னர் ஆமையின் முகம் உங்களை நோக்கி இருக்குமாறு அணிந்து கொள்ள வேண்டும். வலது கை நாடு விரல் மற்றும் மோதிர விரலில் அணிய வேண்டும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் ஆமை உருவம் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். இதே முறையில் நீங்கள் மோதிரம் அணிந்து கொண்டால் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கத் துவங்கும். செல்வ செழிப்பை அதிகரிக்கச் செய்யும் ஆமை மோதிரம் வாஸ்து சாஸ்திரத்தில் சிறப்பாக போற்றப்படுகிறது.

அதிக அளவில் நீரில் வாழும் ஆமை நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளுக்கு எதிராக செயல்படும் என்பதால் இத்தகைய ராசியினர் அணிந்து கொள்ளக் கூடாது. ஆமை மோதிரத்தை அணிவதால் ஐஸ்வரியம் மட்டுமல்லாமல், தொழிலும் நல்ல ஒரு முன்னேற்ற பாதையில் செல்லுமாம். உடல் குளிர்ச்சி அடைந்து, மனம் சாந்தி பெற்று, நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கத் துவங்கும். எனவே ஆமையை பற்றிய தவறான கருத்துக்களை இனியும் மாற்றிக் கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts