பிந்திய செய்திகள்

சாமி எந்திரங்களை உங்களுடைய வீட்டில் இப்படி வைத்தால் எந்த ஒரு பலனும் இருக்காது.

ஆதிகாலத்திலிருந்தே ராஜாக்கள் தகடுகளை தங்களுடைய அரண்மனையில் வைத்து பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். காரணம் இதில் சில அறிவியல் ரீதியான உண்மைகளும் மறைந்திருக்கின்றன. செப்புத் தகடுகளில் அல்லது வெள்ளி தகட்டில் அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட தகுடுகளில் கூட சில கோடுகளை முறையாக வரைந்து, மந்திரங்களை ஜபித்து அந்த எந்திரங்களை சக்தியூட்டி வைத்திருப்பார்கள். இந்த நல்ல ஆற்றலானது மின்காந்த அலையினோடு செயல்பட்டு நமக்கு நிறைய நன்மைகளை செய்யும். இந்த மின்காந்த அலைகளை தான் வாஸ்து என்று நாம் குறிப்பிடுகின்றோம். சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுபோல எந்திரங்கள் நம்முடைய வீட்டில் இருந்தால் அந்த எந்திரங்களை நாம் எப்படி சுவற்றில் மாட்டி வைக்க வேண்டும் என்பதை பற்றிதான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அந்த காலத்திலேயே சுவாமி படங்களாக இருந்தாலும், எந்திரங்களாக இருந்தாலும் இவைகளை சுவற்றில் அப்படியே ஆணியை அடித்து மாட்டி இருக்க மாட்டார்கள்.

ஒரு சிறிய ரிப்பர் துண்டை வைத்து, அதன் மேல் சுவாமி படங்களை நிற்க வைத்து, அந்த சுவாமி படம் லேசாக பூமியை நோக்கி சாய்ந்து இருக்குமாறு வைத்து, ஒரு கம்பியை போட்டு கட்டி மாட்டி வைத்திருப்பார்கள். காரணம் நேராக சுவாமி படங்களை மாட்டி வைத்திருந்தால், அதனுடைய நேர்மறை ஆற்றலானது நம்முடைய வீட்டிற்கு கிடைக்காமல் போய்விடும். அதுவே அந்த படங்கள் லேசாக பூமியை பார்த்தவாறு இருக்கும் போது, அந்த சுவாமி படத்தில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல் நம் வீட்டிலேயே நிலையாகத் தங்கும் என்ற ஒரு சூட்சமமும் அதில் மறைந்திருந்தது.

உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய எந்திரங்களை கட்டாயமாக சுவற்றில் அப்படியே நேராக மாட்டி வைக்கவே கூடாது. இதன் மூலம் நமக்கு எந்த ஒரு நல்லதும் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் கெடுதல் நடக்கக் கூடாது அல்லவா. எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணும் இந்த தவறை இனி யாரும் செய்யாதீர்கள். வீட்டில் எந்திரங்களை பிரேம் போட்டு வைத்திருந்தால், அதை எப்படி உங்களுடைய வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருமுறை கவனித்துக் கொள்ளுங்கள். (உங்களுடைய வீட்டில் எந்திரங்கள் சுவற்றோடு சுவர் இருந்தால் அதில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அந்த எந்திரத்தை லேசாக பூமியை பார்த்தவாறு சாய்த்து மாட்டிக் கொள்ளுங்கள்.)

எந்திரங்கள் தகடுகள் இப்படிப்பட்ட விஷயங்கள் நம்முடைய பூஜை அறையில் இருந்தால் அதற்குத் தகுந்த பூஜை புனஸ்காரங்களை தினம்தோறும் செய்து வரவேண்டும். வாங்கி வந்த எந்திரத்தை பூஜை அறையில் ஏதோ ஒரு மூலையில் போட்டு வைப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் நிச்சயமாக கிடைக்காது.

சில பேர் பணம் காசு வர வேண்டும், கடன் தீர வேண்டும் என்று யாரேனும் ஏமாற்றி எந்திரங்கள் தகடுகள் கொடுத்தால் அதை வாங்கி வந்து அப்படியே தங்களுடைய பீரோவில் வைத்து கொள்வார்கள். ஆனால் முன்பின் தெரியாதவர்களிடம் இப்படிப்பட்ட எந்திரங்களை தகடுகளை வாங்கி நம்முடைய வீட்டில் வைப்பது அவ்வளவு சரியான விஷயம் அல்ல. மந்திர தந்திர வித்தைகளை சரியாக முழுமையாக பயின்றவர்கள், நம்பத்தகுந்தவர்களிடம் மட்டும் இப்படிப்பட்ட பொருட்களை வாங்கி உங்களுடைய வீட்டில் வைப்பது நல்லது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts