பிந்திய செய்திகள்

வீட்டிற்குள் அடிக்கடி அணில் வருகிறதா?

ஒரு வீட்டுக்கு அடிக்கடி அணில் வருகிறது என்றால் நிச்சயம் இதெல்லாம் நடக்கும் என்று சகுன சாஸ்திரங்கள் கூறுகிறது. அணிலுக்கும், அதிர்ஷ்டத்திற்கும் நிறையவே தொடர்பு உண்டு. அணில் மற்ற ஜீவராசிகளையும் விட தனித்துவமானது. அடிக்கடி வீட்டிற்கு அணில் வருவது நல்ல பலன்களைத் கொடுக்குமா? என்ன மாதிரியான பலன்கள் நமக்கு ஏற்பட இருக்கிறது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒருவருடைய வீட்டிற்கு அணில் அடிக்கடி வந்தால் அந்த வீட்டை சுற்றி ஏதாவது ஒரு மரம் நிச்சயம் இருக்க வேண்டும். மரம் இல்லாத இடத்தில் அணில் நிச்சயம் தங்குவது இல்லை.

ஆனால் மரத்தில் இருக்கும் அணில்கள் அடிக்கடி நம் வீட்டிற்குள் வந்து செல்கிறது என்றால் அது நமக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்க இருக்கிறது என்று அர்த்தமாம். வீட்டில் அணில் இறக்க நேர்ந்தால் அது துரதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஆனால் அணில் வருவது எப்பொழுதும் அதிர்ஷ்டம் தவிர, துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது.

வீட்டிற்குள் அணில் வந்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் குறையும் என்று பலன்கள் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கணவன், மனைவியிடையே இருக்கும் எத்தகைய கருத்து வேறுபாடுகளும் நீங்கி அவர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

அணில் மீது போடப்பட்டிருக்கும் கோடுகள் ஸ்ரீராமனுடைய கைபட்டு உருவானது என்று புராணங்கள் கூறுகிறது. ராமபிரான் உடைய மூன்று விரல்களால் அணிலை தடவிக் கொடுத்ததால் இப்போது அணிலுக்கு அக்கோடு நிரந்தரமாகிப் போனது என்பது வரலாறு ஆனால் ஸ்ரீராமர் அணிலுக்கு கொடுத்தல வரங்கள் பற்றி நமக்குத் தெரியாது.

அணில் இருக்கும் இடங்களில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வீட்டிற்கு மரம் வளர்த்தால் கண்டிப்பாக அணில்கள் வரக் கூடிய நல்ல மரங்களை வளர்ப்பது நல்லது. மாமரம், கொய்யா மரம் போன்ற மரங்களை அணில்கள் விரும்பி தேடி வரும் மரங்கள் என்பதால் இம்மரங்கள் வீட்டில் வளர்த்தால் பேரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். அணில் அடிக்கடி வீட்டுக்குள் வந்தால் ஸ்ரீராமனுடைய அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். விவாகரத்து வரை சென்றாலும் மீண்டும் ஒன்றினைவர். தவறான வழியில் செல்ல இருப்பவர்களுடைய மனநிலையில் நல்ல ஒரு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் குறையும். தனதான்யங்கள் பெருக இருக்கிறது என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது. குருவிக்கூடு, அணில் கூடு போன்றவற்றை எப்பொழுதும் வீட்டில் கலைக்க கூடாது. இப்படி கலைத்தால் நமக்கு தோஷம் ஏற்படும். பட்சி தோஷம் பலவிதமான பிரச்சனைகளை நமக்கு கொடுக்கும் என்பதால் அணில் கூட்டை எப்பொழுதும் கலைக்கக் கூடாது.

அணிலுக்கு கோதுமை போன்ற தானியங்களை உணவாக தானம் கொடுத்து வாருங்கள், உங்களுக்கு வறுமை என்பதே ஏற்படாது. அணிலை அடித்து துன்புறுத்தவோ அல்லது அதன் வாலைப் பிடித்து இழுக்கவோ கூடாது. இது பெரும் பாவத்தை சேர்க்கும். இதனால் ஏழேழு ஜென்மங்களுக்கும் பாவங்கள் தொடரும் என்பதால் அணிலை துன்புறுத்தக் கூடாது.

அணில் மட்டுமல்ல நம் வீட்டிற்கு வரும் எந்த ஜீவராசிகளையும் நாம் துன்புறுத்தி அனுப்பக்கூடாது. ஏதோ ஒரு காரணத்திற்காக அது நம் வீட்டிற்குள் தெரியாமல் வருகிறது எனவே அதற்கு உணவு கொடுத்து பத்திரமாக அதனுடைய இடத்தில் சேர்த்து விட வேண்டுமே தவிர அதை அடைத்து வைப்பது அல்லது துன்புறுத்துவது போன்றவற்றை ஒரு போதும் செய்யக் கூடாது. அணில் வீட்டில் வந்தால் நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் உடன் கொண்டு வரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts