பிந்திய செய்திகள்

வைகாசி தேய்பிறை சஷ்டி விரதமிருந்து ஆறு விளக்குகள் முருகனுக்கு ஏற்றி வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்!

முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த இந்த சஷ்டியில் நாம் கொஞ்ச நேரம் மனம் உருகி முருகனுடைய மந்திரங்களை உச்சரித்து அல்லது ‘ஓம் சரவணபவ’ என்னும் அவருடைய சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நமக்கு வந்த துன்பம் எல்லாம் மாயமாய் மறைந்துவிடும். வேண்டிய வரத்தை வேண்டியபடி கொடுக்கக் கூடியவர் சிவபெருமான்! அவருடைய மைந்தனும் அவ்வகையில் வேண்டிய வரத்தை நமக்கு வேண்டிய படி கொடுக்கிறார்.

இந்த தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அங்குள்ள அர்ச்சகரிடம் முருகனுக்கு அபிஷேகம் செய்ய தேவையான பொருட்களில் உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபீட்சம் பெருகும். அறியாமல் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு புண்ணிய பலன்கள் இரட்டிப்பாகும் அற்புதமான ஒரு பரிகாரமாக இந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறது.

சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு பிள்ளைப்பேறு உண்டாகும் என்கிற ஐதீகமும் உண்டு. இதைத்தான் ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்று கூறப்படுகிறது. சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் பிள்ளைவரம் உண்டாகும் என்கிற இந்த அற்புதமான தத்துவத்தை உணர்த்த கூடிய இந்த பழமொழியை இப்படித்தான் நாம் படிக்க வேண்டும்.

காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியும் என்றால் அந்நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் சுத்தம் செய்து முருகன் சிலைக்கு மற்றும் முருகனுடைய வேல் இருந்தால் அதற்கும் தேன் மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

முருகனுக்கு உகந்த வாசம் மிகுந்த மலர்களை சாற்றி முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகளை ஏற்றி வழிபடுதல் சிறப்பு! ஒவ்வொரு விளக்கும் கிழக்கு நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

பின்னர் நைவேத்தியத்திற்கு முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு நைவேத்திய பொருளை படைக்கலாம் அல்லது உங்களால் முடிந்தால் சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து வையுங்கள் போதும். இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம், முருகனுக்கு நாவல் பழம் என்றால் மிகவும் இஷ்டமான ஒரு பழம் ஆகும்.

இந்நாளில் முருகனுடைய ஸ்தோத்திரங்கள் அல்லது மந்திரங்கள், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை படிக்க வேண்டும். அது போல காலையில் ஆரம்பித்த விரதத்தை மாலையில் இதே போல விளக்கு ஏற்றி நைவேத்தியம் படைத்து முடித்துக் கொள்ளுங்கள்.

வைகாசியில் வரக்கூடிய இந்த தேய்பிறை சஷ்டி முருகனுக்கு ரொம்பவே விசேஷமானது எனவே இந்நாளில் முருகப் பெருமானை வழிபட்டு வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts