பிந்திய செய்திகள்

தீராத நோயிலிருந்து விடுபட்டு அனுமனைப் போல பலசாலியாக மாற வேண்டுமா?

தீராத நோய் பிரச்சனை இன்று பெரும்பாலும் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. மருந்து மாத்திரையோடு தான் வாழ்கின்றோம். ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால் ஒருவேளை அந்த மாத்திரையை சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியவில்லை.

அந்த அளவிற்கு மருந்து மாத்திரையின் ஆதிக்கம்தான் தற்போது அதிகமாக உள்ளது. காரணம் காலநிலை மாற்றம். உணவுப் பொருட்கள் சாப்பிடுவதில் மாற்றங்கள். என்று நிறைய மாற்றங்களை நவநாகரீகம் என்ற கொண்டு வந்து நம்முடைய ஆரோக்கியத்தை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம்.

கொஞ்சம் நம்முடைய தாத்தா பாட்டி அம்மா அப்பா சிறு வயதில் சாப்பிட்ட உணவு பொருட்களை மீண்டும் இப்போது நாம் சாப்பிட்டு வர தொடங்கிவிட்டால் ஆரோக்கியம் நம்மைத் தேடி தானாக வந்து விடும். இதை முயற்சி செய்து பாருங்கள்.

ருசியான ஃபாஸ்ட் ஃபுட் உணவு பண்டங்களை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ருசி குறைவாக இருக்கக் கூடிய ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகளை, பழ வகைகளை சாப்பிட்டு வாருங்கள்.

சரி, ஏதோ தவறு செய்துவிட்டோம். நோய்நொடிகள் வந்துவிட்டது. இதை ஆன்மீக ரீதியாக தவிர்ப்பதற்கு என்ன பரிகாரம் செய்வது. உங்களுக்கு உடல் உபாதைகள் இருந்தால் மருந்து மாத்திரை சாப்பிட்டு கொண்டே இருங்கள்.

மருத்துவரின் ஆலோசனையை கைவிடாதீர்கள். கூடவே இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்களேன். மருந்துக்கு ஆயிரமாயிரமாக செலவு செய்கின்றோம். ஒரு நூறு ரூபாய் கணக்கில் இந்த பரிகாரம் முயற்சி செய்து பார்த்தால் தவறு கிடையாது.

மைசூர் தால், வெல்லப் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து குரங்குக்கு சாப்பிட கொடுக்கவேண்டும். செவ்வாய்க்கிழமை இப்படி செய்து வர உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மைசூர் பருப்பை லேசாக வேகவைத்து அதில் கொஞ்சமாக வெல்லம் சேர்த்து பிசைந்து உருட்டி குரங்குகளுக்கு கொடுக்கலாம். ஏதாவது மலைக்கோவிலில் உள்ள குரங்குகளுக்கு இந்த தானத்தை செய்வது மிக மிக சிறப்பு.

அனுமன் கோவிலுக்கு சென்றுதான் ஹனுமனுக்கு கொடுக்க வேண்டும் என்று கிடையாது. உங்கள் வீட்டின் அருகே மரத்தில் குரங்குகள் வாழ்ந்தால் கூட அந்த குரங்குகளுக்கு இதை சாப்பிடக் கொடுங்கள்.

குரங்குகள் வாழும் மரத்தடியில் நீங்கள் சமைத்த உருண்டையை ஒரு ப்ளேட்டில் வைத்து கூட அப்படியே அந்த இடத்தில் வைத்து விட்டு, வந்தால் குரங்குகள் வந்து சாப்பிட்டு கொள்ளும்.

அடுத்தபடியாக மைசூர் பருப்பு, சிவப்பு நிற வெள்ளம், சிவப்பு நிற வஸ்த்திரம், சிவப்பு நிற பூ, இவைகளை செவ்வாய்க்கிழமை அனுமன் கோவிலுக்கு தானமாக கொடுக்கலாம்.

உங்களால் எந்த அளவு வாங்கிக் கொடுக்க முடியுமோ அது உங்களுடைய இஷ்டம். பருப்பும் வெல்லமும் ஒரு கிலோ வாங்கி தானம் கொடுத்தால் கூட சரிதான்.

அந்த கோவிலில் இருக்கும் புரோகிதர் கையில் இந்த பொருட்களை தானமாக கொடுத்து விடுங்கள். சிவப்பு நிறம் என்பது அனுமனுக்கு உகந்த நிறமாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது அந்த செந்தூர நிறம் இருக்கும் அல்லவா. அந்த நிறத்தின் அடிப்படையில் தான் இந்தப் பொருட்களையெல்லாம் தானம் செய்கின்றோம்.

இரண்டு பரிகாரத்தில் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்ய முடிந்தால் கூட நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம் நீங்களும் அனுமனைப் போல பலசாலியாக மாறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts