Home ஆன்மீகம் நம் குறைகளை தீர்க்கும் ஏழு வியாழக்கிழமை விரதம்

நம் குறைகளை தீர்க்கும் ஏழு வியாழக்கிழமை விரதம்

0
நம் குறைகளை தீர்க்கும் ஏழு வியாழக்கிழமை விரதம்

நம் மன குறைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான நிறைவு வாழ்க்கை அமையும்.ஏழு வியாழக்கிழமை விரதம்

மகான் ஸ்ரீ ராகவேந்திரர் விரதத்துக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். விரதம் தொடங்கும் முதல் வியாழக்கிழமை காலையில் குளித்து, தூய ஆடை அணிந்து பூஜையை ஆரம்பிப்பக்க வேண்டும்.

பூஜைக்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம்,குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து வணங்க வேண்டும். நிவேத்தியமாக மங்களப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய் முதலியவைகளை படத்தின் முன் வைத்த பின் பூஜையைத் தொடர வேண்டும்.

பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் மகான் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம்,குங்குமம்,துளசி மாலை சாத்த வேண்டும். அதே போல குத்து விளக்கிற்கும் சந்தனம்,குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வேண்டும்.

பூஜையின் போது மகான் ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும். மகான் படத்திற்கு தீப, தூப ஆராதனைகள் காட்டி தேங்காய் உடைத்த பின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசியை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

“பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
ஸ்ரீ காம தேநுவே”

என்ற ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். இது போல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும்.

அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு,பழம்,படைத்து மணமிக்க மலர்களால் அலங்கரித்து, தூப தீப ஆராதனைகள் செய்ய வேண்டும். ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில், பானகம், துளசி நீர், பால் இதுபோன்ற திரவ ஆகாரங்களை அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் சாதம் சாப்பிடலாம். இது போல் ஏழு வியாழக்கிழமைகள் விரதம் கடைப் பிடித்தால் நம் மன குறைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here