Home Blog Page 12

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை..!

கடந்த சில நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அத்தோடு வெளிநாட்டு கல்விக்காக மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகரித்தமையே இதற்கு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேசமயம் நாளொன்றுக்கு நூறுகணக்கானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணத்தை மேற்கொண்டுவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேவேளை நாட்டுக்கு வருபவர்களின் எண்னிக்கை கடும் வீழ்ச்சியடைத்துள்ளதாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றதாக கூறப்படுகின்றது.

உலக நாடாளுமன்ற வரலாற்றில்…இலங்கையில் இடம்பெற்ற முதல் கொலை!

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் அனைத்துலக நாடாளுமன்ற பேரவைக்கு அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவமானது உலக நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது சம்பவமாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (31-05-2022) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

அது மாத்திரமின்றி 72 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்குவதற்குக் கூட இடமின்றி அவர்களது வீடுகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன.

இது மிகவும் மோசமான செயற்பாடாகும். எனவே தான் இவ்விடயம் தொடர்பில் அனைத்துலக நாடாளுமன்ற பேரவைக்கு அறிவிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நாட்டில் ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழக் கூடிய உரிமை இருக்கிறது.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருப்பிடங்களுக்கு தீ வைக்கப்பட்டமையானது, அந்த உரிமையை மீறும் வகையிலான செயற்பாடாகும். எனவே, இது குறித்து 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் முக்கிய உறுப்புரையொன்று இணைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 21 ஆவது திருத்தத்தில் நாட்டில் எந்தவொரு பிரஜையும் வாழ்வதற்கான உரிமையும், சுதந்திரமாக வசிப்பதற்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வாழ்வதற்கான உரிமை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயத்தில் எந்தவொரு தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான விமலவீர திஸாநாயக்க, இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பை வழங்குமாறும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விரைவில் இதற்கும் வரிசைதான்

தற்போது நிலவும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பேக்கரி பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவிக்கையில்,
தற்போது நிலவும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 7000 பேக்கரிகளில் சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுவிட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பாண் மாவின் விலை அதிகரிப்பு இந்த நிலைமை ஏற்பட காரணம் என அவர் தெரிவித்தார்.

இதேநிலை நீடித்தால் பேக்கரி பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உணவில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதால் என்ன பயன்கள்!

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.

சிலருக்கு பசி உணர்வு குறைவாக இருக்கும். இவர்கள் சுண்டைக்காயை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சளி அல்லது ஜலதோஷம் உள்ளவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து அல்லது சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

நமது உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வயதாக வயதாக எழுப்புகளின் உறுதித்தன்மை குறைந்து கொண்டே வரும்.

சுண்டைக்காயில் கல்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எனவே சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியடையும்.

எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டை வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் நீங்கும்.

கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய் வருவதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. அதேபோல் அதீத உடல் உஷ்ணம் மற்றும் அதிக அளவு கார உணவுகள் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது.

இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் சேர்த்து குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

கறிவேப்பிலை பொடி மினி இட்லி!

இங்கு கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வதற்கான எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது.

தேவையான பொருட்கள் :

மினி இட்லி – 10

கறிவேப்பிலை பொடி – 2 டீஸ்பூன்

இட்லி மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் – சிறிது

உப்பு – ருசிக்கு

தாளிக்க.

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அதில் இட்லியை போட்டு

அதன் மேல் கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடி, உப்பு தூவி நன்றாக குலுக்கி இறக்கவும்.

மணமும் சுவையும் கொண்ட அபாரமான இட்லி இது.

மஞ்சள் கயிறு அணிந்து இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விடயம்..?

பெண்கள் அணிந்துள்ள மங்கல கயிறாக இருக்கும் இந்த மஞ்சள் கயிறு எப்போதும் சேதமில்லாமல், அழுக்குகள் இல்லாமல், கருப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மஞ்சள் கயிற்றில் தினமும் மஞ்சள் தடவ சொல்வதும் இதனால் தான். மங்களத்தின் அடையாளமாக இருக்கும் இந்த மஞ்சள் கயிற்றை எந்த அளவிற்கு பராமரித்து வருகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டு இருந்தால் அதில் அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு. அழுக்குகள் நிறைந்துள்ள மஞ்சள் கயிற்றை அணிந்திருக்கும் பெண்களிடம் செல்வம் நிலைப்பதில்லை.

அழுக்காக இருக்கும் கயிற்றை அடிக்கடி நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தினமும் மஞ்சள் தடவி வந்தால் அதன் நிறம் மங்காமல் பாதுகாக்கப்படும். மேலும் மஞ்சள் கயிறு சேதம் அடைவதற்கு முன்பே அதை மாற்றி விட வேண்டும். எனவே நீண்ட நாட்களுக்கு ஒரே கயிற்றை பயன்படுத்த வேண்டாம்.

மாங்கல்யத்தில் பழுது ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்படி உங்கள் மாங்கல்யத்தில் விரிசல் அல்லது பழுது ஏற்பட்டால் நீங்களாகவே சென்று அதை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்களுடைய குல வழக்கப்படி உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கலந்தாலோசித்து என்ன செய்வது? என்று முடிவு எடுக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் வீட்டில் இருக்கும் மூத்த சுமங்கலிப் பெண்களை கடைக்கு கூட்டி சென்று புதிய மாங்கல்யத்தை அவர்களுடைய கைகளால் வாங்க வேண்டும். மாங்கல்ய பழுது உள்ள பெண்கள் தனியாக சென்று புதிய மாங்கல்யத்தை வாங்கக் கூடாது.

தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது இது போல புதிய மாங்கல்யத்தை மாற்றிக் கொள்பவர்கள் அதை முறையாக மாற்றிக் கொள்வது நல்லது. எப்பொழுதும் தாலிக்கயிறு மாற்றும் பொழுது கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்ற வேண்டும்.

நின்று கொண்டோ அல்லது வேறு திசையில் நின்றோ தாலிக் கயிற்றை மாற்றக் கூடாது. இதனால் கணவனுக்கோ அல்லது அப்பெண்ணுக்கு தீர்க்காயுள் என்பது குறையும்.

திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் மாங்கல்யத்தை மாற்றுவது மிகவும் நல்லது. சூரிய உதயத்துக்கு பின்பு, சூரியன் மறைவதற்கு முன்பு தாலிக்கயிறை மாற்றி விட வேண்டும். சூரியன் மறைந்த பிறகு மாலை நேரத்தில் மாற்றக்கூடாது அது போல ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் கண்டிப்பாக தாலி கயிறு மற்றும் மாங்கல்யத்தை மாற்றக்கூடாது.

புதிய மாங்கல்யத்தை அணிபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு நடைபாதையில் அமராமல் ஓரமாக ஓரிடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து மூத்த சுமங்கலிப் பெண்களின் கைகளால் உங்களுடைய மாங்கல்யத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

மாங்கல்யத்தை அவர்கள் கோர்த்து கொடுக்க உங்களுடைய கணவன் அதை போட்டு விடலாம். ஒருபோதும் நீங்களாகவே புதிய மாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ளக் கூடாது. மாங்கல்ய சரடு அல்லது மஞ்சள் கயிற்றில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தொங்க விடக்கூடாது.

சிலர் ஊக்கு, சாவி போன்ற பொருட்களை மாட்டி வைப்பது உண்டு. இது மிகவும் தவறான செயலாகும். இதை ஒருபோதும் செய்யாதீர்கள். வெள்ளிக்கிழமையில் தினமும் மாங்கல்யத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பழகுங்கள். இவ்வாறு தாலியை பராமரித்தால் அப்பெண்ணும், அப்பெண்ணின் கணவனின் ஆயுளும் தீர்க ஆயுள் பெறும் என்பது ஐதீகம்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-06-2022)

மேஷம் :

அசுவினி: ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். ஆதாயமான நாள்.
பரணி: எதிர்பாராத லாபம் உண்டாகும். பணவரவால் கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.
கார்த்திகை 1: முயற்சியில் இருந்த தடை விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்கள் உதவுவர்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முதலீட்டை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை.
ரோகிணி: எண்ணங்களில் ஒன்று நிறைவேறும். வரவு செலவில் கவனம் தேவை. குடும்ப நலனில் அக்கறை கூடும்.
மிருகசீரிடம் 1, 2: குடும்ப நலனுக்காக முயற்சி மேற்கொள்வீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். நிதானம் அவசியம்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நெருக்கடியை சமாளித்து வெல்வீர்கள். மகிழ்ச்சி நிலவும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும்.
திருவாதிரை: மனதில் இருந்த அழுத்தம் குறையும். விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள். வரவால் மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: இனிய சம்பவம் நடந்தேறும். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் உண்டாகும். நன்மையான நாள்.

கடகம் :

புனர்பூசம் 1, 2, 3: எதிர்பாராத செலவு உண்டாகும். பயணம், பண விஷயத்தில் எச்சரிக்கையும் கவனமும் தேவை.
பூசம்: வழக்கு முடிவு உங்களுக்கு சாதகமாகும். அரசு வழியில் நன்மை ஏற்படும். செலவு அதிகரிக்கும்.
ஆயில்யம்: புதிய முயற்சி நிறைவேறும். குடும்ப மகிழ்ச்சிக்காக செலவு செய்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்:

மகம்: வருமானத்தில் இருந்த தடை விலகும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். லாபமான நாள்.
பூரம்: வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு வரும். தொழிலில் இருந்த சங்கடம் விலகும். லாபம் அதிகரிக்கும்.
உத்திரம் 1: இழுபறியாக இருந்த உங்களுடைய முயற்சிகள் வெற்றியாகும். வருவாயில் இருந்த தடைகள் விலகும்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்கள் பாராட்டு பெறுவர். உழைப்பிற்கு மரியாதை உண்டாகும்.
அஸ்தம்: தொழிலில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
சித்திரை 1, 2: முயற்சிகள் வெற்றியாகும். குடும்ப நெருக்கடிகளை சரி செய்வீர்கள். பணவரவு மகிழ்ச்சி தரும்.

துலாம் :

சித்திரை 3, 4: முயற்சிகளில் இழுபறி உண்டாகும். அரசு வழியில் பிரச்னைகள் உருவாகும். எச்சரிக்கை அவசியம்.
சுவாதி: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். அரசு சம்பந்தப்பட்ட செயல்களில் எச்சரிக்கையும் கவனமும் தேவை.
விசாகம் 1, 2, 3: வம்பு வழக்குகள் உங்களை சங்கடப்படுத்தும். சட்ட விரோத செயல்களில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்:

விசாகம் 4: எதிர்பார்த்தவற்றில் இழுபறியே இருக்கும். பயணத்தில் கவனமும் எச்சரிக்கையும் தேவை.
அனுஷம்: வீண் பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். எதிர்பார்த்த நன்மை உண்டாகாமல் போகும்.
கேட்டை: திட்டமிட்ட விஷயம் குளறுபடியாகும். எதிர்பார்த்த விஷயத்தில் சங்கடத்திற்கு ஆளாகலாம்.

தனுசு :

மூலம்: கணவன் மனைவிக்குள் பிரச்னை தீரும். குடும்பத்தினரின் தேவை நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
பூராடம்: நண்பர் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். செயல்களில் புதிய வேகம் இருக்கும்.
உத்திராடம்1: உற்சாகமாக செயல்படுவீர்கள். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். லாபமான நாள்.

மகரம்:

உத்திராடம் 2, 3, 4: முயற்சியில் இருந்த தடை விலகும். விரோதிகள் விலகிச் செல்வர். வரவுகள் கூடும்.
திருவோணம்: வழக்கத்தை விட செயலில் வேகம் இருக்கும். நிறைவேறாத எண்ணம் கூட இன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: சோர்வு விலகும். எண்ணம் எளிதாக நிறைவேறும். ஆதாயம் கூடும். முன்னேற்றமான நாள்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: முயற்சியில் தடையை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் ஆடம்பரச் செலவு கூடும்.
சதயம்: பணத்தேவை அதிகரிக்கும். ஆதாயம் எதிர்பார்த்து மேற்கொண்ட முயற்சி நிறைவேறாமல் போகும்.
பூரட்டாதி 1, 2, 3: பூர்வீக சொத்துகளில் பிரச்னைகள் உருவாகும். பண வரவில் தடைகளையும் காண்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். வேலை, தொழில் காரணமாக சிலர் வெளியூர் செல்வர்.
உத்திரட்டாதி: எதிர்பாராத வேலையால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அதிகாரிகளுடன் அனுசரித்துப் போவது நல்லது.
ரேவதி: முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் சங்கடங்களை சந்திக்க நேரிடலாம்.

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமான பாகங்கள் கண்டுபிடிப்பு

நேபாள நாட்டின் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானம் சுற்றுலா நகரான பொக்காராவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும். நேற்று காலை 10.15 மணிக்கு இதுபோல சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோம்சாம் நகருக்கு புறப்பட்டது.

விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள சிப்பந்திகள் என 22 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் விமானம் இமயமலையின் பனிபடர்ந்த பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது.

விமானம் எந்த இடத்தில் விழுந்தது, எப்படி விபத்து ஏற்பட்டது என்பது பற்றி நேபாள ராணுவத்தினர் விசாரணை நடத்தினர். இதற்காக ராணுவ வீரர்கள், மீட்பு குழுவினர் விமானம் விழுந்த பகுதியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானம் விழுந்த இடம் தெரியவந்துள்ளது. சனோஸ்வர், தசாங் 2, முஸ்டாங் பகுதியில் எங்கள் மீட்பு படையினர் விமான பாகங்களை கண்டுபிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

விமானம் விழுந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அங்கு விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இதுபோல விபத்தில் பலியானவர்களின் உடல்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. என்றாலும் பலியானவர்களின் உடல்களை தேடும் பணி தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே விமானத்தில் பயணம் செய்தவர்கள் யார்-யார்? என்ற பட்டியலை விமான நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்களும் மகாராஷ்டிர மாநிலம் பூனாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அசோக் குமார் திரிபாதி, அவரது மனைவி வைபவி பண்டேகர், குழந்தைகள் தனுஷ் மற்றும் ரித்திகா என தெரியவந்துள்ளது. இவர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.

பிரபல நடிகை மூலம் இணையும் விஜய் – அஜித்!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர், அதிக விருந்தினர்கள் அனுமதியில்லை என்பதால் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்டில் மாற்றி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மகாபலிபுரத்தில் வைத்து நடைபெறும் திருமணத்தில் பிரபலங்கள் இருபது பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த இருபது பேரில் ரஜினி , கமல், விஜய், அஜித், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில், நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித், விஜய் இருவரும் நயன்தாரா திருமணத்தின் மூலம் சந்திக்க இருப்பதால் தல – தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

6 குழந்தைகளை கிணற்றுக்குள் வீசி எறிந்து கொலை செய்த தாய்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ள காரவலி கிராமத்தில் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 6 குழந்தைகளை தாய் கிணற்றுக்குள் வீசி எறிந்து கொலை செய்த சம்பவம் பதறவைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

குறித்த கிராமத்தில் 30 வயதான பெண் ஒருவரே , அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளையும் அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் பதறியடித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்ற பொலிசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது 6 குழந்தைகளும் பரிதாபமான உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.

18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் இவ்வாறு தாயால் இரக்கமற்று கிண்றில் வீசி எறியப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பெண்ணை கைது செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் வெறுப்படைந்த அவர், தான் பெற்ற தனது 6 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version