பிந்திய செய்திகள்

ஆப்கானிஸ்தானை முறியடித்து இந்தியா பெற்ற வெற்றி அசத்தல்!

திங்களன்று நியூ சண்டிகரில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு அணித் தலைவர் ஷுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் அபாரமான சதங்களும், சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதாரின் சிறப்பான அறிமுக ஆட்டமும் முக்கிய காரணமாக அமைந்தன.

முதல் இன்னிங்ஸில் ராகுல் மற்றும் கில் ஆகியோரின் சதங்கள் இந்திய அணியை 564/8 என்ற வலுவான ஓட்ட இலக்கினை எட்ட வழிநடத்தியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் 41 ஓட்டங்கள் என்ற அதிரடியான தொடக்கக் கூட்டணியை அமைத்தனர். ராகுல், சாய் சுதர்சனுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் என்ற முக்கியமான கூட்டணியை அமைத்தார்.

கே.எல். ராகுல் தனது சொந்த மண்ணில் மூன்றாவது டெஸ்ட் சதத்தையும், ஒட்டுமொத்தமாக 12வது சதத்தையும் பதிவுசெய்தார். அவர் 165 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பிறகு அணித் தலைவர் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் மற்றொரு வலுவான இணைப்பாட்டத்தை அமைத்து இன்னிங்ஸை நிலைப்படுத்தினர்.

சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதார் (6/33) மற்றும் வொஷிங்டன் சுந்தர் (4/36) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு, ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்தது. இந்தப் போட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் ஒரு பகுதியாக இல்லாததால், தற்போது ஆறாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் WTC தரவரிசையில் இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கீழ்வரிசை துடுப்பாட்ட வீரர்களான வொஷிங்டன் சுந்தர், மொஹமட் சிராஜ் மற்றும் மானவ் சுதார் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்தியா 564/8 என்ற ஓட்ட எண்ணிக்கயை எட்டியது. இது இந்தியாவின் ஒரு இன்னிங்ஸ் வித்த

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts