சுவிட்சர்லாந்து நாட்டில், எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகையை 10 மில்லியனாக கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டம் தொடர்பான முக்கிய பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.
தற்போது 9.1 மில்லியனாக உள்ள மக்கள் தொகை கட்டுப்பாடற்று அதிகரித்து வருவதால், வீடமைப்பு, போக்குவரத்து, பொதுச் சேவைகளில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்று வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி கூறுகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காகவே இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், மருத்துவமனை, ஹோட்டல் துறைகளில் பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் முறிந்து சுவிட்சர்லாந்து உலகளவில் தனிமைப்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கமும் தொழில்துறையினரும் எச்சரிக்கின்றனர்.
தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, இத்திட்டத்திற்கு எதிராக 52% பேரும், ஆதரவாக 45% பேரும் உள்ளதால் வாக்கெடுப்பின் முடிவு மிக நெருக்கமான வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









































