பிந்திய செய்திகள்

கனடா நாட்டுப் பொலிஸார் விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இவர் கனடாவிற்குள் உள்நாட்டு வான்பயணங்கள் உட்பட 900க்கும் அதிகமான வான்பயணங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காலப்பகுதியில் வர்த்தக விமானங்களை இயக்குவதற்கான முறையான உரிமமோ அல்லது சரக்கு போக்குவரத்து விமானங்களை இயக்குவதற்கான செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரமோ இவரிடம் இருந்திருக்கவில்லை என கனடா நாட்டுப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இத்தகவல் கண்டறிந்ததை அடுத்து, இந்த நபரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான விமானப் பயணிகளின் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கியமை தொடர்பாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் இவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது தெரிய வரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts