முல்லைத்தீவில் பாலத்தினை மூடி வீதிஅபிவிருத்தியா?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட ஆனந்தபுரம் சிவநகர் கிராமங்களுக்கு மத்தியில் செல்லும் ஜேசுதாஸ் வீதி தற்போது புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வீதியில் ஏற்கனவே பாலம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பாலத்தினை மூடி வீதியினை செப்பனிடுவதால் கிராமத்தில் மழைவெள்ளம் தேங்கும் அபாயம் காணப்படும் என கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 1.28 கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்த வீதி தற்போது செப்பனிடப்பட்டு வருகின்றது இதில் ஒரு பாலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளபோதும் பாலம் ஏற்கனவே இருந்து நீர்வடிந்தோடக்கூடிய தாழ்நிலபகுதி வீதியில் உள்ள பாலத்தினை மூடிவிட்டு வீதியினை போடுவதால் குறித்த பகுதி ஊடாக நீர் வழிந்தோடாத அபாயநிலை இதனால் வெள்ளம் ஏற்படும் போது மக்களின் காணிகளில் வெள்ளம் நிரம்பும் நிலை காணப்படுவதாக கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

குறித்த பழைய பாலம் அமைந்துள்ள பகுதியில் புதிய பாலம் ஒன்றினை அமைக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இது தொடர்பில் பிரதேச செயலாளர்,புதுக்குடியிருப்பு பிரதேச சபைதவிசாளர் உள்ளிட்டவர்களுக்கு எடுத்துக்கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இரு கிராமங்களுக்கு மத்தியில் செல்லும் வீதி அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலில் ஒரு கிராம மக்களை மாத்திரம் அழைத்து கலந்துரையாடிவிட்ட இவ்வாறான அபிவிருத்தி பணியினை முன்னெடுத்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மழைவெள்ள அனர்த்த்தினை கருத்தில் கொண்டு கிராமத்தின் நன்மை கருதியும் தாழ் நிலபகுதிகளை கருத்தில் கொண்டும் இந்த வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்கள்

Exit mobile version