சைப்ரஸிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை அமைச்சு அனுமதி

நேற்று (06) நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் சைப்ரஸின் டெரா கேவிஸ் நிறுவனத்திடமிருந்து 450,000 பீப்பாய் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனம் சமர்ப்பித்த விலை மனுக் கோரலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 78 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யவும் இணங்கியுள்ளது.

டொலர் பிரச்சினை காரணமாக எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கொடுப்பனவு கிடைக்கும் வரையில் எரிபொருளை விநியோகிக்காது காத்திருக்கும் நிலையை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிகின்றது.

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு வருடாந்தம் 400 முதல் 500 ட்ரில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version