48 வயதில் 2வது திருமணம் செய்யும் பிரபல நடிகர்..

2008-ல் வெளியான ராக் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரபல இந்தி நடிகர் பர்கான் அக்தர்.இவர் நடித்த பாக மில்கா சிங் படம் பெரிய வெற்றி பெற்றது. மேலும் இவர் நடிப்பில் கடந்த வருடம் டூபான் படம் வெளியானது.

அமீர்கான் நடித்த தில் சத்தா ஹை படத்தை பர்கான் அக்தர் இயக்கி இருந்தார். இந்த படம் தேசிய விருது பெற்றது. 2000-ம் ஆண்டு அதுனா பாபானி என்பவரை பர்கான் அக்தர் திருமணம் செய்து 17 ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

Farhan Akhtar flaunts his ripped body in new PIC, GF Shibani Dandekar  shares priceless reaction | PINKVILLA

பின்னர் இந்தி நடிகையும், பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. 41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இவர்கள் திருமணம் வருகிற 21-ந்தேதி நடக்க உள்ளது.

Quantcast
Exit mobile version