இந்திய அரசாங்கம் சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்கதீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சுவீட் செல்பி ,பியூட்டி கேமரா உள்ளிட்ட செயிலிகளுக்கு தடை விதிக்க அரசு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.
சீன நிறுவனங்களின் செயலிகளில் உளவு மென்பொருள் உள்ளதாகவும், பயனாளர்களின் தரவுகளைத் திருடும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.