(பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28-ம் தேதிக்குள்)வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 14.26 லட்சம் இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகளை தடை செய்துள்ளதாக அரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்க்கு வந்த புகார்கள் அடிப்படையிலும், வாட்ஸ்ஆப் மற்றும் இந்திய சட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஐடி சட்டம் 2021, விதி எண் 4(1)(d)-ன் கீழ் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பிற்கு வந்த 194 புகார்களின் அடிப்படையில் வெறும் 19 கணக்குகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அனைத்தும் வாட்ஸ்ஆப் வைத்துள்ள தடுப்பு அம்சங்களுக்கு கீழ் விதிமீறல்களை செய்த கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பின் தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் வன்முறையை பரப்புவோர், தீய செயல்களில் ஈடுபடுவோர் ஆகியோரின் தரவுகள் பயனர்கள் அளிக்கும் ஃபீட்பேக் மற்றும் அதிகம் பிளாக் செய்யப்படும் கணக்குகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு, அவை தடை செய்யப்படுகின்றன என வாட்ஸ்ஆப் விளக்கம் அளித்துள்ளது.