தன் பதாகையை நீங்கிவிட்டு சாதனையாளர் பட்டம் பெற்று திரும்பிய அர்ச்சுனா!

யாழ்ப்பாண நகரின் மையப்பகுதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு பலரின் கண்ணிலேயே நிலைத்துக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்களில் சபை நாகரீகமின்றி செயற்படுதல், மோசமான வார்த்தை பிரயோகங்கள் மற்றும் கூட்டங்களை குழப்புதல் போன்ற குற்றச்சாட்டுகள் அருச்சுனாவின் மீது முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து நேற்று இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிகவும் தகாத வார்த்தை பிரயோகத்தில் அவர் ஈடுபட்டு இருந்தது என்பதற்கான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன.

மேலும் இதே நிலையில் பதாகைக்கு செருப்பு மாலை அணியப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு காலை முதல் காரில் வந்த அருச்சுனா இராமநாதன், பதாகையைக் கிழித்தெடுத்து தனது காரில் எடுத்து சென்றுள்ளார்.