Home Blog Page 235

புத்தளத்தில் இறால் பண்ணை நீர் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் மரணம்

0

நேற்று (24) காலை புத்தளம் – ஆராச்சிக்கட்டுவப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள இறால் பண்ணை நீர் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பத்துளுஓயா – மகாமாலிய பகுதியைச் சேரந்த 51 வயதுடைய இரண்டுப் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த நபர் நேற்று இறால் பண்ணையில் இறால்களுக்கு காலை நேர உணவை வீசிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த நபர் இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் வீழ்ந்து கிடப்பதை அவதானித்த இறால் பண்ணையின் இது தொடர்பாக ஆராச்சிகட்டுப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த தகவலின் அடிப்படையில் அங்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன், அங்கு வருகை தந்த ஆராச்சிக்ட்டுப் பிரதேச திடீர் மரண விசாரனை அதிகாரி சம்பவ இடத்தில் மரண விசாரனையை மேற்கொண்ட பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஆராச்சிக்கட்டுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தளபதி விஜய்யுடன் மோதும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் ?

0

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து கயடு லோஹர், சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் போன்ற பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி அதன்பின்னர் சென்னையில் அரங்குகள் அமைத்து சில முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பீஸ்டுடன் மோதும் வெந்து தணிந்தது காடு?

இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘கேஜிஎஃப் 2’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படமும் ஏப்ரலில் வெளியாகும் என்ற தகவலினால் இருவருடைய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம்…!

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுக்கவும் கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது

நாகப்பட்டினம் மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த 3 தமிழக மீனவர்கள், கடந்த 23-ம் தேதி அன்று வேதாரண்யம் கடற்கரையிலிருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 300 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 30 லிட்டர் டீசல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்துவதன் மூலம், தமிழக மீனவர்களை, அவர்களது பாரம்பரிய பாக் வளைகுடா மீன்பிடி கடல் பகுதிகளுக்கு வரவிடாமல் தடுப்பதை இலக்காகக் கொண்டு இலங்கை செயல்படுவதை காண முடிகிறது.

இது நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய அரசு வாய்மூடி மௌனமாக இருத்தல் கூடாது.

அதேபோன்று இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை வரும் பிப்.7 முதல் பிப்.11 வரை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்து வருகிறது.

இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிக்கும் அல்லது சேதப்படுத்தும் செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையிலும் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

கம்போடிய நாட்டில் தங்கம் வென்ற எலி பற்றி தெரியுமா?

0

கம்போடிய நாட்டில் கன்னிவெடிகளை அகற்றிய எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்துள்ள நிகழ்வு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

கம்போடிய நாட்டில் பாதுகாப்புகளுக்காக 6 மில்லியன் வரை கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கன்னிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம் பேருக்குமேல் இறந்துள்ளனர். இதனால், கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக கன்னிவெடிகளை அகற்றி வருகிறது.

மனிதர்கள் அகற்றினால் உயிருக்கு ஆபத்து வரும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த எண்ணியது. அப்போதுதான், ஆப்பிரிக்க எலி மாகவா கன்னிவெடிகளை அகற்றக்கூடியது என்று கம்போடிய அரசுக்கு தெரியவந்துள்ளது. கன்னிவெடிகளை அகற்றுவதற்காகவே மாகவா பயிற்சியும் எடுத்துள்ளது. அந்த எலியை கம்போடியா கொண்டு வந்து கடந்த ஏழு வருடங்களில் 39 கன்னிவெடிகளை அகற்றியுள்ளனர். வெடிக்காத 28 பொருட்களையும் மாகவா அகற்றியுள்ளது.

கன்னிவெடிகளை அகற்றிய எலி - தங்கப்பதக்கம் அணிவித்து கெளரவப்படுத்திய  இங்கிலாந்து! | England honored with gold medal for rat detoxification! |  Puthiyathalaimurai - Tamil News | Latest ...

அதோடு, 1 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர அடிகளை மாகவா தோண்டியுள்ளது. இது 20 கால்பந்து ஆடுகளங்களுக்கு சமமானது என்று சொல்லப்படுகிறது. இந்த எலியின் அரும்பணியை பாராட்டும் விதமாக இங்கிலாந்தின் கால்நடை அமைப்பு மாகவா எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கியுள்ளது. “மாகவா எலி ஒரு சூப்பர் ஹீரோ. மனிதர்களை காப்பாற்றுவதில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டது” என்றும் பாராட்டியுள்ளது. மேலும், இந்த வகை எலிகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பதவியேற்றுக்கொண்ட முன்னால் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்…

0

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் உடன் நடைமுறையாகும் வகையில் இடம் மாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர், காவல்துறை ஊடகப் பிரிவுக்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் அஜித் ரோஹண மீண்டும் ஊடகப் பேச்சாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அஜித் ரோஹண, கடந்த வருடம் ஜூன் மாதம் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக பதவி உயர்வு பெற்றிருந்த நிலையில், ஜூலை மாதம் உடன் நடைமுறையாகும் வகையில் இடம் மாற்றம் பெற்றிருந்தார்.

யாழில் காவல்துறையின் திடீர் நடவடிக்கை-சிக்கிய ஆயுதங்கள்

நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாயில் வாள் மற்றும் கோடரிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் காவல்துறையினரால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்தே வாள்கள், மற்றும் கோடரிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது 2 கஜேந்திர கோடரிகள், நீளமான வாள் ஒன்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ள போதும், எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையை மிரட்டும் மற்றுமொரு நோய்!

0

இலங்கையில் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நோய் நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறாமை என்பன எலி காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என சமூக நல வைத்திய நிபுணர் அமில ஏரங்க சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தற்போது, வயல் பகுதியிகளை அண்டி வசிப்பவர்கள் மாத்திரமன்றி நகர் பகுதிகளில் வசிப்பவர்களும் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் இப்படி ஒரு மோசமான தந்தையா?

0

அட்டாலுகம பிரதேசத்தில் தனது 13 வயது மகளை
துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி விசாரணை அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து அந்த குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக கல்லறைக்கு எடுத்து சென்றபோது இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் மருத்துவரைக் கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கமைய, அவரது தாயார் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாகவும், தந்தையின் காவலில் இருந்த போது தான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துளார்.

சுப்பரான பிரெட் பீட்சா செய்வது எப்படி?

0

தேவையானவை:

கிரீன் சட்னி செய்ய:

புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பீட்சா செய்ய:

பிரெட் ஸ்லைஸ் - 4

கிரீன் சட்னி - ஒரு கப்

குடமிளகாய் (மஞ்சள், சிவப்பு) - தலா அரை கப் 

(பொடியாக நறுக்கியது)

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

மொஸரெல்லா சீஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்

ஓரிகானோ - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கிரீன் சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

பிரெட் ஸ்லைஸ்களின் மீது கிரீன் சட்னியைத் தடவவும். அதன் மேல் குடமிளகாய் கலவையைப் பரப்பவும்.

அதன் மேலே சீஸ் துருவல், ஓரிகானோ, உப்பு, மிளகுத்தூளைத் தூவவும்.

பிறகு இதை மைக்ரோவேவ் அவனில் மீடியம் பவரில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

உக்ரையினை சூழ்ந்த போர் மேகம்-குவிக்க பட்ட ஆயுதங்கள்

0

உக்ரையின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு அச்சத்தை அடுத்து மேற்குலகம் உக்ரையினுக்குரிய ஆயுத தளபாட உதவிகளை அதிகரித்துள்ள அதேவேளை, உக்ரையினில் உள்ள தமது தூதரகங்களில் உள்ள அத்தியாவசியமற்ற பணியாளர்கள் தத்தமது குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ள பின்னணியில் ஆயுத உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீது ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், உக்ரையினுக்குரிய ஆயுத தளபாட உதவிகளையும் மேற்குலகம் அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு திட்டங்கள் ஏதும் இல்லை என ரஷ்யா கூறிவந்தாலும், அதன் எல்லைப்புறத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதால் ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டை நம்பமுடியாதென மேற்குலக நாடுகள் கூறிவருகின்றன.

இதற்கிடையே உக்ரையின் கொதிநிலையை மைப்படுத்தி அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இந்தவாரம் சந்திப்புகள் நடத்தப்படவுள்ள பின்னணியில், உக்ரையினுக்கான ஆயுத உதவிகளை மேற்குலகம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஆயுத தளபாடங்களை அனுப்பியுள்ளன.

பிரித்தானியாவில் இருந்து தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் அனுப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க தரப்பில் நாசகார ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில் மூன்று பால்டிக் நாடுகள் எஸ்ரோனியா, லத்வியா மற்றும் லிதுவேனியா ஆகியன உக்ரைனுக்கு தாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்ப தயாராகியுள்ளன.

நெதர்லாந்து இரண்டு F-35 போர் விமானங்களையும், பல்கேரியாவுக்கு அனுப்பவுள்ளது. ஸ்பெயினும் தனது தரப்பில் கருங்கடலுக்கு போர் விமானங்களையும் ஒரு போர்க்கப்பலையும் அனுப்ப முன்வந்துள்ளது.

செக் குடியரசு உக்ரைனுக்கு 152-மில்லிமீற்றர் பீரங்கிகளுக்குரிய வெடிமருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ளது. ஜேர்மனி உக்ரைனுக்கு முழு வசதிகளுடன் கூடிய கள மருத்துவமனையை வழங்கவுள்ளது.

உக்ரையினை மையப்படுத்திய ரஷ்ய சார்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்திய காரணத்தால் ஜேர்மனியின் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் கே-அச்சிம் ஷான்பாக் பதவி விலகியிருந்த நிலையில் இந்த நகர்வு எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.