இலங்கையில் பேருந்து சேவைகளுக்குப் பாதிப்பு

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து உரிமையாளர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மேலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இதற்கானத் தீர்வைக் கோரி எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் கெமுனு விஜயரத்ன கூறியுள்ளார்.