உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமான ஏவுகணைத் தாக்குதல், வான்தாக்குதல், பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு முக்கிய நகரங்கள் அத்தனையையும் உருக்குலைய வைத்து வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.மேலும்
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக் செயலி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தியுள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.