நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது.
‘ஃபேமிலி மேன்’ புகழ் ராஜ் மற்றும் டிகே கதையை உருவாக்க திகந்த் மற்றும் குல்ஷன் தேவய்யா, ஸ்ரீமுகி, கவுதமி, ஆனந்த், லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ட்ரெய்லரின் தொடக்கத்தில் சமந்தா தனது காதலரின் வீட்டுக்குள் நுழைவது போல் காட்டப்படுகிறது. அங்குள்ள குடும்பத்தினர் அவரிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர். சாதி சமையல் கலை மற்றும் உடன்பிறந்தவர்கள் குறித்து குற்றவாளியை விசாரிப்பது போல் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இப்படத்தின் ட்ரெய்லரில் சமந்தா எதிரிகளை பறக்கவிட்டு அடிக்கும் சண்டைக் காட்சிகள் ஆக்கிரமிக்கின்றன. வரும் ஜூன் 19 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு முன்னாள் கேங்ஸ்டர் தனது பழைய வாழ்க்கையை விட்டு விலகி குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழும் கதைக்களம் இப்படத்தில் சித்தரிக்கப்படுகிறது.











































