பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி பாடகருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
இதற்கு முன், அவரின் வழக்கை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேவேளையில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120 இன் கீழ் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்தல் விடுத்திருந்தார். அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், பிணையில் செல்வதற்கு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.











































