ஜனாதிபதியின் ஆணையின் அடிப்படையில் காணிகள் மீள மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், காணிகள் தொடர்பில் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு பணித்துள்ளார்.
ஜனாதிபதி தொடர்ந்து காணிகள் மீள மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற நிலையை கடைப்பிடித்து வருகிறார். இதன் அடிப்படையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் விசேட குழுவினர்கள் கடந்த திங்கட்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்து இராணுவ முகாம்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இலங்கை இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட விசேட குழுவினர்கள் கடந்த திங்கட்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்து இராணுவ முகாம்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களுக்கு சென்று காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய்ந்தனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கு பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 2000 ஏக்கருக்கு அதிகமான காணிகளை இராணுவ தரப்பினர் தம் வசம் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக கையகப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றினை மீள மக்களிடம் கையளித்து தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இராணுவ முகாம்களுக்கு சென்று காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய்ந்த விசேட குழுவினர்களில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவும், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் அடங்குவர்.
அவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களுக்கு சென்று காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய்ந்தனர்.











































