பிந்திய செய்திகள்

பிரதமர் தலைமையில் கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு கூட்டம்

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ‘விசேட டெங்கு ஒழிப்பு வாரம்’ முன்னெடுக்க கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு தீர்மானித்திருக்கின்றது. இத்தீர்மானம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 12 ஆம் திகதி கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் அறிக்கைகளின்படி, தற்போது நாடு முழுவதும் பதிவாகியுள்ள சுமார் 39100 டெங்கு நோயாளர்களில் 25.8% விகிதத்தினர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இந்நிலையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு மாவட்டம் ‘அதி-அபாய’ மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. வைரஸின் தன்மை மற்றும் அதற்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியைப் பெற்றுக்கொள்ள மக்கள் போதிய அவகாசம் பெறாமை என்பன இந்நோய் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த காலத்தில் நிலவிய கடும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இம்முறை டெங்கு பரவல் வீடுகளை விட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களிலேயே அதிகமாகக் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அகற்றப்படாத திண்மக் கழிவுகள் மற்றும் வடிகால் அமைப்புகள் நுளம்புகள் பெருகுவதற்கு முக்கிய காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 15 முதல் 21 வாரத்தில் அரச தனியார் நிறுவனங்கள் பாடசாலைகள் மற்றும் வீடுகளைச் சூழவுள்ள பகுதிகளைச் சுத்தப்படுத்துவதற்கான சிரமதானங்களை ஏற்பாடு

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts