பிந்திய செய்திகள்

அயதுல்லா அலி கமேனி கடைசித் தவழ்க்கை ஈரான் அறிவித்தது

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குகள் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி ஜூலை 9-ஆம் தேதி அவரது சொந்த ஊரான மஷ்ஹாத்தில் நடைபெறும் என்று அங்கு அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலின் முதல் நாளில், பெப்ரவரி 28-ஆம் தேதி அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். அவர் ஈரானை சுமார் 36 ஆண்டுகள் வழிநடத்தி வந்தார்.

இஸ்லாமிய சட்டப்படி, இறந்தவரின் உடலை 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், போர் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. தெஹ்ரானில் உள்ள அயதுல்லா கமேனியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது மருமகளும் உயிரிழந்தார்.

அந்த தாக்குதலில் காயமடைந்த கமேனியின் 56 வயது மகன் மொஜ்தபா தற்போது ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஜூலை 4-ல் தொடங்கும் இறுதிச்சடங்கு ஊர்வலம் ஜூலை 7-ஆம் தேதி தெற்கு தெஹ்ரானில் உள்ள கோம் புனித நகரைக் கடந்து, இறுதியாக ஜூலை 9-ஆம் தேதி மஷ்ஹாத் நகரில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts