பிந்திய செய்திகள்

கொழும்பில் அசத்தலான சம்பவம்: காதல் மயக்கத்தில் சிறுவனின் ஆபத்தான செயல்

கொழும்பில் காதலிக்காக ஒரு பேருந்தை கடத்திய 15 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பிலியந்தலை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து கடத்தப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை பார்வையிடுவதற்காக சாரதிகள் அருகில் நிறுத்தி வைத்திருந்த பேருந்து கடத்தப்பட்டது. பேருந்து சாரதிகள் உடனடியாக பொலிஸிடம் முறையிட்டனர். பொலிஸ் உடனடியாக விசாரணையை ஆரம்பித்து நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ – பிலியந்தலை வழியில் சந்தேகத்தின் அடிப்படையில் பேருந்தை நிறுத்தி, அது கடத்தப்பட்ட பேருந்து என உறுதி செய்தனர்.

தப்பி ஓட முயன்ற சிறுவனை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்தனர். சிறுவன் தனது காதலியை சந்திக்க சென்று விட்டு திரும்பி வந்தபோது பொலிஸாரிடம் சிக்கித் தெரியவந்தது. சிறுவன் தனது காதலியை நேற்று இரவு 8 மணியளவில் தொலைபேசியில் அழைத்து, அவளை சந்திக்க பேருந்து நிலையத்திற்கு வந்து, பேருந்து இல்லாததால் செய்வதறியாது தவித்ததாகவும், பின்னர் ஒரு பேருந்தை சாவி இருந்ததால் அதனை இயக்கி காதலியை சந்திக்க சென்றதாகவும் கூறினார். மேலும் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திக்க பேருந்து கடத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts