தென்கொரிய அணி, 2026 பிஃபா உலகக் கிண்ணத்தின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டில் மாற்று வீரராகக் களமிறங்கிய தென்கொரியாவின் ஓ ஹியோன்-க்யூ (Oh Hyeon-Gyu) ஆட்டத்தின் இறுதியில் வெற்றி கோலை அடித்து, வெற்றியின் நாயகனாக உருவெடுத்தார்.
போட்டியின் பெரும்பகுதி நேரம் தென் கொரிய அணியே சிறப்பாக விளையாடி, கோல் அடிப்பதற்கான பெரும்பாலான வாய்ப்புகளையும் உருவாக்கியது. அணித் தலைவர் சன் ஹியுங்-மின் (Son Heung-min) முதல் பாதியில் ஐந்து முறை கோல் அடிக்க முயற்சித்தார்.









































