Home Blog Page 13

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதம்

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதத்தின்
படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம் இல்லை.

டொலரொன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

ஏனைய வெளிநாட்டு நாயங்களின் பெறுமதி

பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 462 ரூபா 41 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 446 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 394 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பெருமை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி!

உலக சாதனைப் புத்தகத்தில்அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் மினன் வீதி, ஸர்ஜுன் அக்மல் – பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் மகளான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் இடம்பிடித்துள்ளார்.

120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி அவர் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இரண்டு வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மின்ஹத் லமி மருதமுனை வரலாற்றில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த முதலாவது சாதனை சிறுமியாவார்.

இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய சிறுமியை பிரதேச மக்கள் பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

இச்சிறுமி எதிர்காலத்தில் கல்வித் துறையிலும், ஏனைய துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகளைப் பெற்று எதிர்காலத்தில் நாட்டிற்கு பெருமையை தேடித் தரக் கூடிய ஒருவராக மிளிர வேண்டும் என்று பலரும் வாழ்த்துகின்றனர்.
வேறு திறமைகள்

இச்சிறுமி தனது பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை கவனமாகச் செவிமடுத்து மனனம் செய்வதுடன், ஞாபகத்திலும் வைத்துக் கொள்வார்.

இவர் எதாவது ஒரு பொருளையோ, ஒரு இடத்தையோ அவதானித்தவுடன் அது பற்றி அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டக் கூடியவர். அதனை அறிந்து கொண்டு சில நாட்களுக்கு பின்னர் அப்பொருள் பற்றியோ அவ்விடம் பற்றியோ தானாகவே சொல்லக் கூடிய திறமை அவரிடம் உண்டு.

இவர் 300 இற்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை தெளிவாக சொல்லக் கூடிய திறமையுள்ளவர். தமிழ் அகரவரிசையிலுள்ள 247 எழுத்துகளையும் மிக வேகமாக சொல்லக் கூடியவர்.

அத்துடன் மாதங்கள், வாரங்கள், நிறங்கள், பழங்கள், வடிவங்கள், உடல் உறுப்புகளின் பகுதிகள், பறவைகள், இலக்கங்கள், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் அதற்கான சொற்களையும் ஒழுங்குவரிசையாகவும், வரிசை இல்லாமலும் மிக வேகமாக சொல்லக் கூடிய திறமை இவரிடம் உண்டு.

இவை தவிர பொதுஅறிவு உள்ளிட்ட விடயங்கள், 100 இஸ்லாமிய கேள்விகளுக்கான பதில்களை சொல்லக் கூடியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகளின் சடலங்கள்

வீடொன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

திடீரென மன்னார் வைத்தியசாலையில் மரணமடைந்த இளைஞர்கள்!

நேற்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளைஞர்களின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இளைஞர்களின் உயிரிழப்புக்கு அளவுக்கு அதிகமான போதைப் பொருள் உள்ளீர்த்தமையே காரணமென மருத்துவர்கள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.

திடீர் சுகயீனமடைந்ததாக கூறி வித்திராஸ் – மௌசாட் (வயது 35), மகேந்திரன் பிரதீப் (வயது 26) என்ற இருவரே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்ததாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

வாகனம் ஒன்றில் 4 பேர் கொழும்பு நோக்கிப் பயணித்த நிலையில் நோய்வாய்ப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக போதைப் பொருள் பாவனையே மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், வாகனத்தில் இருந்த எஞ்சிய இருவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் மின்வெட்டு மீண்டும் அமுலுக்கு

நாடளாவிய ரீதியில் மீண்டும் இலங்கையில் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் ஜூன் மாதம் 2 ஆம் திகதி 5 ஆம் திகதி வரையான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

ஜூன் 2 ஆம் திகதி மற்றும் 3 ஆம் திகதி 2 மணிநேரமும், ஜூன் 4 ஆம் திகதி ஒரு மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 5 திகதி மின்வெட்டு அமுலில் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே

இன்று (31) முற்பகல் இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும் லியனகேவிடம் ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார்.

தற்போது இராணுவத்தில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் நாளை (01) லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.

அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ கேம் கண்ட்ரோலர்..!

ஜியோ நிறுவனம் முற்றிலும் புதிய ஜியோ கேம் கண்ட்ரோலரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் ஆகும். இதில் நீண்ட பேக்கப் வழங்கும் ரிசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கிளாசிக் தோற்றம் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கிறது.

இதில் இரண்டு வைப்ரேஷன் மோட்டார்கள் மற்றும் இரண்டு பிரெஷர் பாயிண்ட் ட்ரிகர்கள் உள்ளன. இவை தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன. ப்ளூடூத் வசதி கொண்ட ஏராளமான ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் ஜியோ கேமிங் கண்ட்ரோலர் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் 10 மீட்டர்கள் வரையிலான வயர்லெஸ் ரேன்ஜ் கொண்டுள்ளது.

இந்த கேமிங் கணட்ரோலர் ஆண்ட்ராய்டு டேப்லெட், ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சிறப்பான கேமிங் அனுபவம் பெற இந்த கண்ட்ரோலரை ஜியோ செட் டாப் பாக்ஸ் கொண்டு பயன்படுத்த ஜியோ அறிவுறுத்துகிறது. ஜியோ செட் டாப் பாக்ஸ் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ப்ளூடூத் 4.1 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஜியோ கேம் கண்ட்ரோலர் தற்போது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஜியோ கேம் கண்ட்ரோலர் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேம் கண்ட்ரோலருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை 10.30 மணியளவில்மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகசிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம்(31) இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பல நூற்றுக்கணக்கான பெண்கள்,இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பெண்கள் வலையமைப்பினர்,மூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரியும் தொடர்ச்சியாக நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்ட படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மையும் குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி

லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டான் திரைப்படம் வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார ராசி பலன் 30-05-2022 முதல் 05-06-2022 வரை

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் சிறப்பான பலன்களை தரக்கூடிய அற்புதமான வாரமாக இருக்கிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட லாபம் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் அக்கறை தேவை. குடும்ப அமைதிக்காக பணிந்து போவதில் தவறில்லை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் இனிய வாரமாக அமைய இருக்கிறது. பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் எவ்வளவு எதிர்ப்புகளையும் திறமையாக சமாளிப்பீர்கள். உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்படக் கூடும் என்பதால் எச்சரிக்கை உணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்க இருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கக்கூடிய ஆதாரமாக அமைய உள்ளது. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்ப்புகள் சில சமயங்களில் ஏமாற்றத்தை கொடுத்துவிடும். சுய தொழிலில் இருப்பவர்கள் பணவிஷயத்தில் கவனமுடன் இருப்பது அவசியமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்களின் எண்ணிக்கை பெருகும் என்பதால் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய சிறு பிரச்சனைகளையும் உடனுக்குடன் சரிசெய்வது நல்லது.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் உங்களுடைய மனதில் புது உற்சாகம் தரக்கூடிய அற்புதமான வாரமாக அமையும். இதுவரை தடைகளை சந்தித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் இனி வெற்றிவாகை சூட கூடிய நேரம் காத்திருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபம் தரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை ஆலோசிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சுவாசம் தொடர்பான பிரச்சினைக்கு வந்து மறையும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவும் என்பதால் கவனம் தேவை. தேவையற்றவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைக்க கூடாது. குடும்பத்தில் இருக்கும் அமைதியற்ற சூழ்நிலை மாறி குதூகலத்துடன் காணப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுய தொழிலில் நீங்கள் புதிய யுக்திகளை கையாளுவதன் மூலம் ஏற்றம் காண கூடிய அமைப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் சாதக பலன் உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் பொருளாதார ரீதியான அமைப்பு சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். நண்பர்களுடன் கூட்டுத் தொழில் புரிய நினைப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டு. கணவன் மனைவியிடையே புரிதல் ஏற்படும்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் உங்கள் துன்பத்திற்கு எல்லாம் விமோசனம் கிடைக்க கூடிய நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் முடிவை நோக்கி பயணிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டிய முன்னேற்றம் உண்டு. உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும். கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசி பேசியே பெரிதாக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் உங்களுக்கென தனித்துவமான கொள்கைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராமல் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை சமயோசித புத்தியுடன் இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் முடிவெடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பாதி பிரச்சனையை குறைத்துக் கொள்ளலாம். கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு ரீதியான காரியங்கள் அனுகூல பலன் கொடுக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு இடையே தேவையற்ற மனசஞ்சலங்கள் வந்து செல்லும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் குறித்த நேரத்திற்குள் உங்களுடைய பணிகளை முடித்துக் கொள்வது நல்லது.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் அனுகூலப் பலன்களைக் கொடுக்கக் கூடிய இனிய வாரமாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பூர்வீக சொத்து பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். தேவையற்ற வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனித்து கொள்ளுங்கள்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்க போகிறது. நினைத்த இடத்தில் இருந்து பணவரவு சரளமாக இருக்கும். கொடுக்கல, வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மன கசப்புகள் மாறி ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்கள் அனுகூல பலன் தரும். தேவையற்ற விஷயங்களை பற்றி மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் வெற்றியை நோக்கி பயணிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில் இடையூறுகளை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறு சிறு பாதிப்புகள் குறையும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் வரவைக் காட்டிலும் செலவு அதிகம் இருக்கும் என்பதால் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே தீராத மன உளைச்சல் தீரக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் இனிமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் இணக்கமாக செல்வது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகளில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.