கனடாவின் புரோக்வில் நகரில் கடந்த வாரம் நடந்த கொலைச் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் லுவாண்டா எலியட், மக்காய்லா எலியட், மற்றும் நிகிதா எலியட் என்பவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள புரோக்வில் நகரில் நடந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். 49 வயதுடைய லுவாண்டா எலியட், 17 வயதுடைய மக்காய்லா எலியட், மற்றும் 15 வயதுடைய நிகிதா எலியட் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 17 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட சிறுமிகளில் ஒருவருடன் காதலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் சிறுவன் என்பதால், கனடிய சட்டப்படி அவனது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தக் கொலைச் சம்பவம் புரோக்வில் நகரின் வரலாற்றிலேயே இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை என பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் நூனன் தெரிவித்துள்ளார். இந்தக் கொலைக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







































