பிந்திய செய்திகள்

இந்தியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதியை மீண்டும் அனுமதித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடல்வாழ் உயிரினங்கள், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இந்தியாவிற்கு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரும் கிடைத்துள்ளது. இந்தியா இந்த அனுமதியைப் பெற்றுள்ளதாக இந்திய மத்திய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய வர்த்தக ஒழுங்கு விதிகளின் கீழ் இந்தியா மீண்டும் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விவசாய மற்றும் கடல்சார் வர்த்தகத் துறையில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என இந்தத் தளர்வு எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரம் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.59 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீன் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலையில், இந்த புதிய அனுமதி மீன்பிடித் துறைக்கு பெரும் சாதகமாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய மீன்பிடித் துறையில் இருக்கும் ஏராளமான தொழிலாளர்களுக்கு இந்த அனுமதி நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts