தெற்காசிய மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளது.
இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை தேசிய அணியில் விளையாடிய யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி மாணவி லூட்சி றெஜினஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அவர் இலங்கை தேசிய அணியின் உறுப்பினராக தெரிவாகி இளம் பெண்கள் பிரிவில் விளையாடுவது இலங்கை விளையாட்டுத் துறை மூலம் முதல் முறையாகும்.
இலங்கை அணி தேசிய அணிக்காக தெரிவாகி சாதனை படைத்த மாணவி லூட்சி றெஜினஸின் பயிற்சியாளராக தனுஷ் ராஜசோபனா செயற்பட்டுள்ளார்.







































