பிந்திய செய்திகள்

உணவுக் கொள்கைக் குழு கூட்டம்

உணவுப் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் ஒன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமை காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. எல்-நினோ நிலைமையினால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தல் மற்றும் குடிநீரைப் பாதுகாப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம்கொடுப்பதற்காக முன்கூட்டியே திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார். உணவுப் பாதுகாப்பு குழுவின் அடுத்த கூட்டம் அடுத்த வாரங்களில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts